எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, அக்.3 கருநாடக மாநிலத்தில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த செப் டம்பர்  மாதம் 5ஆம் தேதி, பெங்களூருவில் உள்ள அவரது வீட்டு வாசலில் சில நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அப்படுகொலைகுறித்து பிரதமர் மோடி வாய்திறக்காத மவுனியாக இருப்பது வேதனை யளிப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டதுடன், அரசு அளித்த விருதுகளையும் திருப்பியளிக்க தயங்கமாட்டேன் என்று ஆவேசத் துடன் குறிப்பிட்டுள்ளார்.

கருநாடகாவில் நடைபெற்ற இடதுமுன்னணி வாலிபர் சங்கத் தின் விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ்,

‘கவுரி லங்கேஷைக் கொன்ற வர்கள் யார் என்று கண்டுபிடிக்கப் படலாம், முடியாமலும் போகலாம். ஆனால், அவர் கொல்லப் பட்டதை ஒரு பெரிய கூட்டமே சமூக வலை தளங்களில் கொண் டாடிக் கொண்டிருக்கிறது. நமக்கெல்லாம் அவர்கள் யாரென்றும், அவர்கள் கொள்கைகள் என்ன வென்றும் நன்றாகவே தெரியும். அவர்களெல்லாம் பிரதமர் மோடியின் ஆதரவாளர் கள்தான் என்பது அதிர்ச்சிக்குரிய உண்மை. இதையெல்லாம் பார்த் தும் மோடி மவுனமாக இருப்பது எனக்கு வேதனையளிக்கிறது. அவர் மவுனமாக இருப்பதன் மூலம் என்னை விட சிறந்த நடிகர் என காட்ட முயற்சிக்கிறார்.

அவர் இந்த விவகாரம் குறித்து இனியும் வாய்திறக்காமல் இருந்தால் என் அய்ந்து தேசிய விருது களையும் அரசிடமே திருப்பித்தர தயங்கமாட்டேன்’ என உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner