எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

காலங்களில் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பதுண்டா என்ற கேள்விக்கு டாக்டர் மு.வரதராசனார் அளித்த பதில்:

‘‘முதுநிலைத் தேர்வுக்காக முயன்று படித்து வந்தேன். தேர்வுக்குக்கட்டணம்செலுத் திடபுறப்பட்டநேரம்இராகு காலமாக இருந்தது. அதைப் பற்றி கவலைப்படவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்துபுறப்படும்போதுமுடித் திருத்தும்தொழிலாளி எதிரே வந்தார். அப்போது உறவினர் ஒருவர் ‘‘சகுனம் சரியில்லை தம்பி! மேலும் இப்போது இராகு காலம் வேறு அது கழிந்த பின் புறப்படு’’ என் றார். ‘‘எனது முயற்சியில் குறையில்லை என்றால், நான் தேர்ச்சி பெறுவது உறுதி. அப்படி நான் தேர்ச்சி பெறாமல் போனால், அது என்குறையே.அதற்குமற்ற வர்கள்பொறுப்பாக மாட்டார் கள்’’ என்று கூறி, தேர்வுக் கட்டணத்தை உரிய இடத்தில் செலுத்தினேன். அந்தத் தேர் வில் மாநிலத்தில் முதல் மாண வனாகத் தேர்ச்சி பெற்றேன்.

- டாக்டர் மு.வ.

(‘தமிழாலயம்‘,

செப்டம்பர் - அக்டோபர் 2017)

மு.பி.பா. என்று அன் போடுஅழைக்கப்படும்பேரா சிரியர் முனைவர் மு.பி.பாலசுப் பிரமணியம் அவர்கள் திரா விடர் இயக்க உணர்வு மேலோங்கும் பச்சையப்பன் கல்லூரி மேனாள் முதல்வர்.

‘தமிழாலயம்'எனும் தலைப் பில் ஒரு மாத இதழைப் பயனுடையவற்றைத்தாங்கும் வகையில் வெளியிட்டு வரு கிறார். அதில் வெளிவந்த ஒரு பெட்டிச் செய்திதான் மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

பொதுவாக மு.வ. என்றால், தமிழ் அறிஞர், ஏராளமான நூல்களை எழுதிக் குவித்தவர் என்ற அறிமுகம்தான் உண்டு. அதனையும் தாண்டி அவர் உள்ளத் தோட்டத்தில் மூடக் கள்ளிக்குஇடமில்லைஎன் பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும்.

மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்து காலத்தையும், பொரு ளையும், உழைப்பையும், ஊதாரித்தனமாக நாசமாக் கும் மக்கள் மு.வ. போன்ற அறிஞர்கள் எப்படி வாழ்ந் திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

மேனாள்குடியரசுத்தலை வர் விஞ்ஞானி ஆ.பெ.ஜெ.அப்துல்கலாம் அவர்களி டம் குடியரசுத் தலைவராகப் பதவியேற்க நல்ல நாள், நேரம்பற்றி அன்றைய மத்திய பி.ஜே.பி. அமைச்சர் பிரமோத் மகாஜன் கேட்டபொழுது, எனக்கு எல்லாமே நல்ல நேரம் என்று பளிச்சென்று பதில் அளித்தார்.

இந்த நேரத்தில் அதனை யும் இணைத்துக் கொள்க!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner