எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒரு முசுலிம் மன்னர் கட்டினார் என்பதற்காக சுற்றுலா பட்டியலிலிருந்து

உலகப் புகழ்பெற்ற ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை அகற்றுவதா?

மோடி அரசு இதனைத் தடுத்து நிறுத்தாவிடின்

மக்களின் மலை போன்ற எதிர்ப்பை சந்திக்க நேரிடும் - எச்சரிக்கை!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பா?  தமிழர் தலைவர் கண்டனம்!

தாஜ்மகால் என்ற உலகப் புகழ் பெற்ற நினைவுச் சின்னத்தை மதவாதக் கண் ணோட்டத்தோடு சுற்றுலா பட்டியலிலிருந்து உ.பி. பி.ஜே.பி. அரசு அகற்றியிருப்பது - மக்களின் மலைபோன்ற எதிர்ப்பை சந்திக்கவேவழிவகுக்கும்;பிரதமர்மோடி இந்தமதவாதப்போக்கைத்தடுத்து நிறுத்தவேண்டும்என்றுதிராவிடர்கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை வருமாறு:

உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்று - உலக நாட்டவர் பெரிதும் வியக்கின்ற ஒன்று, ஆக்ராவில் வெள்ளை பளிங்கு சலவைக் கற் களால் கட்டப்பட்ட தாஜ்மகால் கட்டடம் ஆகும்!

தாஜ்மகால் -பி.ஜே.பி. பார்வையில்...!

அதனை ஆண்டுதோறும் சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் அங்கு சென்று பார்த்து மகிழ்ந்து திரும்புகின்றனர்!

அது முகலாய (முசுலிம்) மன்னர் ஒருவரால் கட்டப்பட்டது என்பதற்காகவே அதனை அலட்சியப்படுத்தி, இருட்டடித்து ஏன் வாய்ப்புக் கிடைத்தால் ‘பாபர் மசூதி’போல இடித்தும் தள்ளிவிடக் கூடத் திட்டமிடுபவர்கள்தான் - மத்தியிலும், உ.பி. மாநிலத்திலும் ஆளும் காவி களான ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா ஆசாமிகள்!

உ.பி.யில் சுற்றுலாபற்றிய இவ்வாண்டு அறி விப்புக் கையேட்டில் சுற்றுலாவில் அதிக பட்சம் உ.பி. அரசுக்கு வருவாய்க் கொண்டுவரும் தாஜ்மகால் பெயரையே நீக்கியுள்ளார்கள்.

உ.பி. சாமியார் ஆட்சியில்

100 குழந்தைகள் பலி!

உ.பி.யில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்த லில் வெற்றி பெற்று அமைந்துள்ள சாமியார் ஆட்சியில், நிர்வாகச் சீர்கேடுகள் நாளும் மலிந்த வண்ணம் உள்ளன. சுமார் 100 குழந்தை கள் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் - உயிர்க் காற்று கிட்டாமல் இறந்துபட்ட கொடுமை, (ஏற்கெனவே சப்ளை செய்தவர்களுக்குப் பணப் பட்டுவாடாவை சரிவர செய்யாததால்) இன்னும் மறவாத - மறையாத நிலை!

ஆட்சியில் உள்ள சீர்கேடுகளை - அவலங் களைச் சரி செய்யவேண்டிய உ.பி. பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசு பசு பாதுகாப்பு என்ற பெயரில் இசுலாமியர்களைக் கொல்லும் நிகழ்வு களைத் தடுக்கத் தவறியது!

தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் சர்வ சாதா ரணமாகக் கொல்லப்படுகின்றனர். நேற்றுகூட ஒரு பகுஜன் சமாஜ் கட்சித் (பி.எஸ்.பி.) தலைவர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளார்கள்!

சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் கீழிறக் கத்திற்குச் சென்று கொண்டுள்ளது.

வரலாற்றுச் சாதனைகளை

மறைக்க முயற்சி!

இந்நிலையில், கிடைத்த ஆட்சி வாய்ப்பைப் பயன்படுத்தி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அவசரம் காட்டுவதும், தாஜ்மகால் போன்ற உலகப் புகழ் வாய்ந்த அதிசய வர லாற்றுச் சாதனைகளை மறைக்க முயலுகிற முயற்சியும் அசல் அற்பத்தனம் அல்லவா?

உ.பி. முதல்வரான யோகி ஆதித்தியநாத் என்ற சாமியார் கூறுகிறார் வெளிப்படையாக,

‘‘இராமாயணமும், பகவத் கீதையும்தான் நமது கலாச்சாரத்தைப் பரப்புவன; தாஜ்மகால் அல்ல’’ என்று; அதனை இப்படி செயல்படுத்திக் காட்டவே தாஜ்மகாலை இருட்டடிக்கும் கேவல மான முயற்சி போலும்!

அக்கட்டடத்தை ஒரு முசுலிம் மன்னர் கட்டியதற்காகவே இவ்வளவு வெறுப்பை உமிழ வேண்டுமா? உலகம் நம் நாட்டின் இழிநிலை கண்டு பாராட்டுமா? கண்டிக்குமா?

அரசியல் சட்டத்தின் பிரமாணத்தில் மதச்சார் பின்மையைக் காப்பாற்ற எடுத்துக்கொண்ட உறுதிமொழியை இப்படியா காலில் போட்டு மிதிப்பது? வெட்கம்! வேதனை!

ஆட்சியல்ல - காட்சி!

பா.ஜ.க. ஆட்சிகள் மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி காட்சிகளாக நடை பெறுகின்றனவே தவிர, ஆட்சிகளாக - ஆளுமைத் திறன் வெளியாகும் வண்ணம் எங்கும் நடைபெறவில்லையே!

காஷ்மீரில் உள்ள மக்களின் நல்லெண் ணத்தை மத்திய அரசு பெறுவதற்கு முட்டுக் கட்டை போடும் வண்ணம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒரு Extra - Constitutional Authority
போல காஷ்மீருக்குத் தனி அந்தஸ்தை வழங்கும் 370 - 35கி ஆகியவற்றை நீக்கிட வேண்டும் என்று கர்ஜிக்கிறாரே, அது எதன் பின்னணியில்?

மோடி அரசு செய்யவேண்டியது என்ன?

கேரள அரசும், மேற்கு வங்க அரசும் தேச விரோத ஆட்சிகள் என்கிறாரே இது நியாயமா? இவர் கூறுகிறபடி ஆட்சி சக்கரம்  சுழலவேண்டும் என்ற நிலை என்றால் அதைவிட ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக் கும் கொடுமை வேறு உண்டா? மத்தியில் உள்ள பிரதமர் மோடி அரசு இதனைத் தடுத்து நிறுத்திடாவிட்டால் கெட்ட பெயரும், மக்களின் மலைபோன்ற எதிர்ப்பும் நாளும் பெருகிடவே செய்யும்!

 

கி.வீரமணி
தலைவர்,      திராவிடர் கழகம்.

சென்னை
4.10.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner