எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

பேராசிரியர் சுந்தரி வெள்ளையன் அவர்களின் படத்தைத் திறந்து வைத்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  தமதுரையில், கல்வியாளர்களும், பகுத்தறிவாளர்களுமாகிய சுந்தரி வெள்ளையன் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, Ô பேராசிரியர் சுந்தரி வெள்ளையன்  பகுத்தறிவு இலக்கிய விருதுÕ அளிக்கப்படும் என்று அறிவித்தார். பரிசுத்  தொகை 50 ஆயிரத்துக்கும் குறையாமல் அளிக்கும் வண்ணம் அறக்கட்டளைக்கு ரூ.5 இலட்சம் நிதி தேவைப்படும் என்றும் தெரிவித்து, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தம் குடும்பத்தின் சார்பில் ரூ.10 ஆயிரம் அளிப்பதாகவும் அறிவித்தார். அவரால் பயன்பெற்றவர்கள், உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அறக்கட்டளைக்கு நிதி வழங்க முன் வரவேண்டும் என்றும் கோரிக்கையை முன் வைத்தார். பேராசிரியர் ப.சுப்பிரமணியம் தம் குடும்பத்தின் சார்பில் ரூ.25 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தார். வல்லம் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் தமது பெற்றோர் பெயரால் (சுந்தரி வெள்ளையன்) உருவாக்கப்படும் ‘‘பேராசிரியர்  சுந்தரி வெள்ளையன் பகுத்தறிவு இலக்கிய விருதுக்கு’’ மகள்கள் பொறியாளர் பார்வதி, டாக்டர் ராதா, டாக்டர் மாதவி ஆகியோர் இணைந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையை பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் அளித்தனர்

(சென்னை, 3.10.2017). நன்றி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner