எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மலையாள நடிகரும், பா.ஜ.க. நியமன எம்.பி.யுமான சுரேஷ் கோபி திருவனந்தபுரத்தில் நடந்த யோகஷேம சபை என்ற பார்ப்பன சங்கக்  கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "எனக்கு மறு பிறவியில் நம்பிக்கை உள்ளது.  நான் அடுத்த பிறவியில் பூணூல் அணியும் வகுப்பான பார்ப்பன வகுப்பில் பிறக்க ஆசைப்படுகிறேன்.  மேலும் கேரள கோவிலில் தலைமை குருக்களாகும் பேறு எனக்குக் கிடைக்க வேண்டும்.  அப்படி இல்லை எனில் கடவுளை தொட்டு அபிஷேகம் செய்யும் பாக்கியமாவது கிடைக்க வேண்டும். பூணூல் அணிந்தவர்கள் கடவுளுக்கு சமம் என நான் கருதுகிறேன்" என்று  பேசியிருக்கிறார்.

இது குறித்து கேரள மக்களிடம் கடுமையான எதிர்வினை கிளம்பியுள்ளது, "ஒரு மனிதன் பிறப்பால் உயர்ந் தவனாவதில்லை, அவன் செய்யும் நல்ல காரியங்களால் உயர்ந்தவனாகிறான், அடுத்த பிறவியில் பிறக்கும் போதே சுரேஷ் கோபி பூணூலுடன் பிறக்கட்டும்" என்று கூறிய கேரளத்தைச் சேர்ந்த ஒருவர்,  ஒரு பிறந்த குழந்தை பூணூலுடன் இருப்பதைப் போல படத்தையும் சமூக வலைதளத்தில் பதிந்துள்ளார்.

பிரபல மலையாள எழுத்தாளர் கே.பி. ஜெயகுமார் தனது முகநூல் பதிவில். "பார்ப்பனர்கள் பிரம்மாவை அறிந்தவர்கள் எனவும், தனது கர்மாவை சரியாக செய்யும் யாரும் பார்ப்பனரே எனவும் சொல்லப்படுகிறது.  ஆனால் உண்மையில் அது போல பார்ப்பனர்கள் தற்போது உள்ளனரா?  இவை எல்லாம் புராண காலத்தில் ஏகலைவனும், சம்பூகனும் பார்ப்பனர் ஆனதாகச் சொல்லப்படுவதோடு சரி.  அந்தக் கூட்டத்தில் சுரேஷ் கோபி, தான் பார்ப்பனர் இல்லை எனும் ஒரு தாழ்வு மனப்பான்மையில் இப்படி உளறி இருக்கிறார்" என அந்த நடிகரை கடுமையாக  விமர்சித்துள்ளார்.

இவர் பா.ஜ.க.வில் சேருவதற்கு முன்பு நடித்த பல படங்களில் அமைந்துள்ள வசனங்கள் பலவும் பார்ப்பனருக்கு எதி ரானதாகவே இருக்கும்.

எடுத்துக்காட்டாக 'பைத்ர குளம்' என்னும் மலையாள திரைப்படத்தில் அவர், "நான் பார்ப்பனர் அல்ல.  நான் ஒரு மனிதன்.  நான் எனது பூணூலை அறுத்து விட்டேன்.  அது மட்டுமல்ல; பார்ப்பன அடையாளமான எனது செண்டையை(குடுமி) மழித்து விட்டேன்" என அனல் பறக்க வசனம் பேசி கைதட்டலை வாங்கியிருந்தார்.

பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டாலே பார்ப்பன மனப் பான்மைக்கு ஆளாகித்தான் தீர வேண்டும். அடுத்த ஜென்மத்தில் பார்ப்பனர் ஆவது இருக்கட்டும்.

இந்தப் பிறவியில் சூத்திரனாக - பார்ப்பானின் வைப்பாட்டி மகனாக (மனு தர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) இருப்பதுபற்றி வெட்கப்படாதது ஏன்?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner