எழுத்துரு அளவு Larger Font Smaller Font

Image may contain: 1 person, standing

போபால், அக்.5 போராட் டத்தில் ஈடுபட்டு கைதான எங்களை காவல்துறையினர் கட்டாயப் படுத்தி ஆடைகளை அவிழ்க்க வைத்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் பந்தல்கண்ட் பகுதி விவசாயிகள் கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டம் நடத் தினர். இந்த போராட்டம் வன் முறையாக மாறியது. இதனை யடுத்து அங்கு வந்த காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டம் நடத் தியவர்களை கலைத்தனர். தொடர்ந்து பலரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு தங்களை காவல்துறையினர் தாக்கியதாகவும், தங்களது ஆடைகளை அவிழ்க்க கட் டாயப்படுத்தியதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி யுள்ளனர். காவல்துறையினர் விவசாயிகள் கற்களை கொண்டு தாக்கியதாகவும், இதில் ஒருவருக்கு காயம் ஏற் பட்டதாக குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக, சில புகைப்படங்களை மாநில காங்கிரஸ் வெளியிட்டது. அதில், சில விவசாயிகள் உள் ளாடையுடன் காவல் நிலை யத்தில் அமர்ந்துள்ளனர். சிலர் உள்ளாடையுடன், தங்களது உடைகளை கையில் பிடித்த வாறு நடந்து சென்ற காட்சிகள் உள்ளன. அக்கட்சி தலைவர்கள் கூறுகையில், விவசாயிகள் தாக் கப்பட்டதுடன், அவமானபடுத் தப்பட்டுள்ளனர். இது தொடர் பாக ஆதாரங்களுடன் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் எனக் கூறினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner