எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடோதரா(குஜராத்) அக் 5 வடோதரா நகராட்சியில் வார்டு எண் 5இன் கவுன்சிலர் பா.ஜ.க வை சேர்ந்த அஸ்முக் படேல். நகரத்தில் முக்கிய பகுதியில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டுவதற்கு அப் பகுதியில் நீண்ட காலமாக குடி யிருந்த மக்களை அங்கிருந்து அகற்றி நகருக்கு வெளியே  குடியிருப்புகளைக் கட்டி குடியேறச்செய்தார். அப்புதிய இடத்தில் குடியேறிய மக்க ளுக்கு அவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.

இந்த நிலையில் வார்டு உறுப்பினர் அஸ்முக் படேல் காலிசெய்யப்பட்ட இடத்தை பார்வையிட வந்தார். அப் போது காலிசெய்யப்பட்ட இடத்தில் மீண்டும் குடிசை களை அமைத்திருந்தனர். இந்த நிலையில் அஸ்முக்படேலைத்  தகாத வார்த்தைகளைப் பயன் படுத்தி திட்டியுள்ளனர். அப் போது அவரை தட்டிக்கேட்ட பெண் ஒருவரை மிகவும் கீழ் தரமான வார்த்தைகளால் விமர் சித்துள்ளார். அதனால் ஆத்திர மடைந்த மக்கள் அவரை ஒரு மரத்தில் கட்டி வைத்து அடித் துள்ளனர்.  படேலின் கார் ஓட் டுநர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித் துள்ளனர்.

அவரை கட்டி வைத்து அடிக்கவில்லை என அங்கி ருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.  ஆனாலும் அவரை மரத்திலி ருந்து காவல்துறையினர் அவிழ்த் துக் கொண்டு செல்வது காட்சி பதிவாக்கப்பட்டு ஊடகங்களில்  பதியப்பட்டுள்ளது.  அது இப் போது வைரலாக பரவி வரு கிறது. காவல்துறையினர் 34 பெண்கள் உட்பட மொத்தம் 64 பேரைக் கைது செய்துள்ளனர்.

வடோதரா நகர நிர்வாகம் சில தனியார் நிறுவனங்களுக்கு அரசின் புறம்போக்கு நிலத்தை சொற்ப விலையில் விற்று விட்டதாகவும், குடிசைமாற்று வாரிய நிலங்களை மோசடி செய்து தனியாருக்கு விற்று விட்டதாகவும் முன்னாள் குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் மீது ஏற்கனவே வடோதராபகுதி சமூக சேவகர் ஒருவர் புகார் அளித்திருந்தார். இது போன்ற பல மோசடிப் புகார்கள் ஆனந்திபென் படேல் மீது எழுந்த காரணத்தால் அவரை முதல்வர் பதவியில் இருந்து மோடி நீக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner