எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சண்டிகர்,அக்.5 அரியா னாவில், 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர், குர்மீத் ராம் ரகீம் சிங்கால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள், அவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கக் கோரி, பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளனர்.

அரியானாவில், பா.ஜ., வைச் சேர்ந்த, மனோகர் லால் கட்டார் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின், சிர்சா நகரில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமையகம் உள்ளது. இதன் தலைவர், குர்மீத் ராம் ரகீம், இரு பெண் துறவியரை, பாலி யல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவ ருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, ரோதக் நகர சிறை யில், குர்மீத் அடைக் கப்பட்டு உள்ளார். இந்நிலையில், குர்மீத்தால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இரு பெண் துறவியர், அவ ருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கக் கோரி, பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து, அந்த பெண்களின் வழக்குரைஞஞர், நவ்கிரண் சிங், சண்டிகரில், செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

குர்மீத்தை, அவனது ஆதர வாளர்கள், தந்தையாக கரு தினர். அந்த சூழ்நிலையில், அவனால் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட பெண் கள், மனரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நம்பிக்கையை உடைத்தெறியும் வகையில், குர்மீத் செயல்பட்டு உள்ளான்; எனவே, அவருக்கு, 20 ஆண்டு சிறைவாசத்துக்கு பதில், ஆயுள் தண்டனை விதிக்கும்படி, மனுவில் கோரி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner