எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

முகநூலில் எழுத்தாளர்களிடையிலான கருத்துப் பகிர்வுகளுக்கான ஏற்பாட்டினை இந்திய எழுத் தாளர்கள் அமைப்பு ஒருங்கிணைத்திருந்தது.

எழுத்தாளர்கள் நயந்தாரா சாகல், கீதா அரிகரன் ஆகியோரிடையே உரையாடல் கருத்துப்பகிர்வு நடைபெற்றது. நாடு விடுதலை அடைந்த 1947 ஆம் ஆண்டு முதல் இன்றைய காலக்கட்டம்வரை ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள்குறித்து விவாதித்தார்கள்.

எழுத்தாளர் நயந்தாரா சாகல் கூறியதாவது:

"உண்மையில் 1975ஆம் ஆண்டு நெருக்கடி நிலையின்போது, சர்வாதிகாரம் கோலோச்சியதை நாம் அனைவரும் கண்டோம். எதிர்க்கட்சியினர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அனைத்து வகையிலும் பேச்சுரிமை முடக்கப்பட்டது. அப்போதுதான் அரசமைப்புச்சட்டமும் திருத்தப் பெற்று, நம்முடைய வாழ்வுரிமை மற்றும் சுதந்திரம் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டது. அதன் காரணமாகவே இன்று நாம் இந்த நிலையில் இருக்கிறோம்.

ஆனால், இன்று உள்ள நிலையானது மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. ஏனென்றால், ஜனநாயகத்தின் பெயராலேயே அனைத்தும் நடந்துகொண்டிருக்கின்றன. வன்முறை கும்பல்  தாக்குதல்கள், பகுத்தறிவாளர்கள், பத்திரிகை யாளர்கள் கொலைகள் எல்லாம் நடக்கின்றன. சகிப்பின்மை என்பதான பெயரால் மற்ற சிறுபான்மையர்களைவிட, குறிப்பாக முசுலீம்கள் குறி வைக்கப்படுவது அதிகரித்தபடி இருக்கிறது.

இந்துத்துவாக் கொள் கையின்படி, இந்தியா என்பது இந்துக்களின் நாடாக மட்டுமே இருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. கிறித்தவ, பவுத்த, சீக்கிய சமயத்தவர்மீது சகிப்புத்தன்மை இருக்கின்ற அதேநேரத்தில், முசுலீம்கள் எதிரிகளாகக் கருதப்பட்டு சகிப்பின்மையுடன் நடத்தப் படுகின்றனர். அவர்களின் அணுகுமுறையில், இந்த நாட்டில் உள்ள முசுலீம்கள் வாழ்வதற்கென்று இடம் எங்கே என்று தேடிப் போகச் சொல்கிறார்கள்.

அதிக அளவிலான வன்முறைகள் நடந்துவந்த போதிலும், சமூகத்தில் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்களின் போராட்டங்களும் அதிகரித்துக் கொண்டுதானிருக்கின்றன."

இவ்வாறு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நயந்தாரா சாகல் குறிப்பிட்டுள்ளார்.

உண்மைதானே - உடனே இவர் மீது எதையாவது குத்துவதற்குத் தயாராக  சில அக்மார்க்குகளைக் கையில் வைத்துக் கொண்டிருப்பார்களே இந்த இந்துத்துவாவாதிகள்!

பொருளாதாரத்திற்காக அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு கொடுத்தபோது கிறித்தவ சதி என்று சொன்னவர்கள் தானே!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner