எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உ.பி. சாமியார் ஆட்சியின் படுபாதகம்

வாரணாசி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நச்சுவாயு கொடுத்துக் கொலை

வாரணாசி, அக் 6 மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல் கலைக்கழகத்தின் கீழ் வரும் சர். சுந்தர்லால் மருத்துவ மனையில் 7 கர்ப்பிணிகள் உள்ளிட்ட  20 நோயாளிகள் மரணமடைந்தனர். இதற்கு காரணம் ஆக்சிஜனுக்குப் பதிலாக நச்சுவாயுவான நைட் ரஜன் கொடுத்ததால் தான் உயி ரிழந்தனர்  என்று உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் காவல் துறையிடம் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகாரை காவல் துறையினர் வாங்க மறுத்து நோயாளிகளின் உறவினர்கள் மீது மருத்துவ மனையில் பணிசெய்யவிடாமல் இடையூறு செய்தனர் என்று வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் மருத்துவ மனைக்கு ஆக்சிஜன் விநியோ கித்த வாரணாசி வடக்கு சட்டப்பேரவை தொகுதி பாஜக உறுப்பினரும், வாரணாசி பாஜக துணைத் தலைவருமான ஹர்ஷவர்தன் பாஜ்பாய் ஆக்சி ஜன் விநியோகம் செய்யும் உரிமம் பெறவில்லை என்பதும், அவர் தொழிற்சாலைகளுக்கான எரி வாயுக்களை விநியோகம் செய்யும் உரிமம் மட்டுமே பெற் றிருக்கிறார் என்ற உண்மையும் தெரியவந்தது. அலகாபாத் நீதி மன்றம் விசாரனை ஆணையம் ஒன்றை அமைத்தது.  அந்த ஆணையம் நடத்திய விசாரணை அறிக் கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வாரணாசி சர். சுந்தர்லால் மருத்துவ மனையில் 2017 -மார்ச் முதல் 20க்கும் மேற் பட்ட மரணங்கள் நிகழ்ந்தன. அதில் குறிப்பிட்ட 20 மரணங் கள் அறுவை சிகிச்சை அறையில் நடந்தவை என்றும், அவர் களுக்கு ஆக்சிஜன் கொடுத்த பிறகு தான் அந்த மரணங்கள் ஏற்பட்டன என்றும் மருத்துவ மனை குறிப்பில் உள்ளது.

அதன்படி ஆக்சிஜன் உரு ளைகளை ஆய்வு செய்த போது அவை ஆக்சிஜன் உருளைகள் அல்ல என்றும், தொழிற் சாலை களில் உலோகங்களை உருக்கு வதற்கு பயன்படும் எரிவாயு விற்கு ஊக்கம் கொடுக்கும் நைட்ரஜன் வாயு உருளைகள் என்றும் தெரியவந்தது.

நைட்ரஜன் உருளைகளையும் அல காபாதைச் சேர்ந்த பாரம ஹண்ட் இண்டஸ்டிரியல் எண் டர்பிரைசைஸ் என்ற நிறுவனம் மருத்துவமனைக்கு விநியோகம் செய்தது. இந்த நிறுவனத் தின் தலைவர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஹர்ஷவர்தன் பாஜ்பாயின் மகன் என்பதும், மருத் துவமனைக்கு ஆக்சிஜன் விநி யோகிக்கும் உரிமத்தை நேரடி யாக ஹர்ஷவர்த்தனே பெற் றுள்ளார் என்பதும் தெரிய வந் துள்ளது.  மேலும் இவர் இதே சிலிண்டர்களை கிங் ஜார்ஜ் மருத்துவமனை லக்னோ, மோதி லால் நேரு மருத்துவமனை அல காபாத்திற்கும் விநியோகித் துள்ளார். இந்த அறிக்கை மீதான விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதி மன்ற வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

கோரக்பூர் மருத்துவமனை யில் ஆக்சிஜன் இன்றி நூற்றுக்-கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த நிகழ்வைத் தொடர்ந்து அனைத்து மருத்துவமனை களிலும் ஆக்சிஜன் கையிருப்பு குறித்த புதிய ஆணை பிறப்பிக் கப்பட்டுள்ளது. மேலும் ஆக் சிஜன் வழங்கும் நிறுவனங் களை பெரும்பாலான உத்தரப் பிரதேச மாநில மருத்துவமனை கள் மாற்றியுள்ளன.  உத்தரப் பிரதேசத்தில் மோடி யின் தொகு தியான வாரணாசியில் பனாரஸ் மருத்துவக் கல்லூரியின் கீழ் சர். சுந்தர்லால் மருத்துவமனை உள் ளது. அரசின் புதிய உத்தர வினைத் தொடர்ந்து சர். சுந்தர்லால் மருத்துவ மனைக்கு ஆக்சிஜன் வழங்கும் நிறு வனமும் மாற்றப்பட்டுள்ளது.

அப்புதிய நிறுவனத்தில் இருந்து ஆக்சிஜன் தருவிக்கப் பட்டுள்ளது. அந்த ஆக்சிஜன் சிலிண்டர்களில் இருந்து மருத் துவமனையின் அவசர சிகிச் சைப் பிரிவில் உள்ளவர்களுக் கும், அறுவைசிகிச்சை நோயாளி களுக்கும் ஆக்சிஜன் வழங்கப் பட்டது. அப்படி வழங்கப் பட்டவர்கள் அனை வரும் உடனடியாக நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உயி ரிழந்தனர். இதனைத் தொடர்ந்து உட னடி யாக அவர்களுக்கு வழங்கப் பட்ட ஆக்சிஜன் நிறுத்தப்பட்டு சிலிண்டர்கள் பரிசோதனை செய்யப்பட்டதில் அது ஆக்சி ஜன் அல்ல நைட்ரஜன் வாயு என்று கண்டுபிடிக்கப்பட்டது

உத்தரப்பிரதேசத்தில் ஆக்சி ஜன் இன்மையால் குழந்தைகள் இறந்த சம்பவம் நாடு முழு வதும் பெரும் பர பரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக் கும் போது மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பல் கலைக்கழகத் தின் கீழ் இயங்கும் ஒரு மருத் துவமனையில், மருத்துவர் களின் அலட்சியத்தால் 20 உயிரி ழப்புகள் நடந்துள்ளன.

இவ்விவகாரம் தொடர்பாக அலகாபாத் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப் பட்டது, இந்த வழக்கு விசாரணையில் மருத்து வமனை சார்பாக கூறப்பட்ட தாவது: "ஆக்சிஜன் குறைபாட் டால் மரணம் ஏற்பட்டது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். எங்கள் மருத் துவமனையில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட வாய்ப் பில்லை, சிகிச்சை பலனின்றி சில மரணங்கள் நிகழ்ந்திருக் கின்றன. இது குறித்து நாங்கள் அப்பிரிவின் தலைமை மருத் துவரிடம் அறிக்கை கேட்டுள் ளோம்" என்று கூறப்பட்டது. நீதிமன்றம் மருத்துவமனையின் பதிலை ஏற்காமல்  மாநில சுகாதாரத் துறை செயலாளர் தலைமையில் ஒரு குழுவை நியமனம் செய்து இவ்விவகாரம் குறித்து முழுமையான விசா ரணை நடத்துமாறு ஆணையிட்டது. அந்த குழுவின் அறிக் கையே தற்போது வெளியாகி யுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் சாமியார் ஆதித்யநாத் தொகுதியான கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவ மனையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதியிலிருந்து 11 ஆம் தேதிவரை 73 குழந் தைகள் மற்றும் அதற்குப் பிறகு 15-ஆம் தேதிவரை 33 குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமையால் தொடர்ந்து மரணத்தை தழுவி யுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்ப வம் தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் இதுவரை எந்த ஒரு வருத்தத்தையும் தெரிவிக்க வில்லை. அதே நேரத்தில் மாநில அரசு கண் துடைப்பிற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அந்த விசா ரணைக்குழுவின் அறிக்கை வெளி யாகும் முன்பே வாரணா சியிலும் இதே போன்று  மரண நிகழ்வு ஏற்பட்டுள்ளது, இந்த மரண நிகழ்விற்கு முழுக்க முழுக்க பாஜக சட்டப் பேரவை உறுப்பினர் நடத்தி வரும் நிறு வனத்தின் கவனக்குறைவாலும், பேராசையாலும் நிகழ்ந்துள்ளது. ஆக்சிஜன் இல்லை என்றாலும், ஆக்சிஜன் சிலிண்டர் என்ற பெயரில் நச்சுவாயுவை தற் போது அனுப்பி 20 உயிர்களை பலிவாங்கி யுள்ளனர்.

இந்த விவகாரத்திலும் இது வரை மாநில அரசும், மத்திய அரசும் அமைதியாக இருந்து வருகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner