எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெங்களூரு, அக். 8- மூத்த பத்திரி கையாளரும், சங்பரிவார் அமைப்பு களை விமர்சித்து வந்தவருமான கவுரி லங்கேசை செப்டம்பர் 5ஆம்தேதி இரவு அவரது வீட் டருகே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சங்பரிவாரில் உள்ள தீவிர இந் துத்துவா அமைப்பு சனாதன் சன்ஸ் தாவைச் சேர்ந்த இன்டர்போல் தேடி வரும் நான்கு பேர் உட்பட அய்ந்து நபர்களை கவுரி லங்கேஷ் கொலையில் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

2009 இல் கோவாவில் மட்காவில் நடந்த குண்டு வெடிப்பிலும் இவர்களுக்கு தொடர்புள்ளது தெரியவந்துள்ளது.கொலை யாளிகள் கோலாப்பூரைச் சேர்ந்த பிரவீன் ரிங்கார் (34), மங்களூருவைச் சேர்ந்த ஜெயப் பிரகாஷ் (45), புனேவைச் சேர்ந்த ஸாரங் அகோல்கர் (38), ஸாங்க்ளியைச் சேர்ந்த ருது பாட்டீல் (37), சத்தாராவைச் சேர்ந்த வினய்பவார் (32) ஆகியோர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் ருதுபாட்டீல், ஸாரங் அகோல்கர், வினய் பவார்ஆகியோர் 2013 முதல் தலைமறைவாக உள்ளனர். சங்பரிவார் அமைப்புகளின் பிரிவினை வாத நடவடிக்கைகளை விமர்சித்து வந்த நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோர் கொலைகளிலும் இவர்களுக்கு தொடர்புள்ளது. தபோல்கர் கொலையில் சிபிஅய்யும், பன்சாரே கொலையில் மகாராட்டிரா சிறப்பு விசா ரணைக் குழுவும் இவர்களை தேடி வரு கின்றன.

கல்புர்கி கொலையாளிகளுக்கும், கவுரி கொலையாளிகளுக்குமிடையில் தொடர்புள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரது உடல்களிலி ருந்தும் எடுக்கப்பட்ட குண்டுகள் ஒரே அளவில் உள்ளன. இருவரையும் 7.65 மி.மீ. நாட்டு கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். பன்சாரேயை கொல்லவும் இதே துப்பாக்கியை பயன்படுத்தி யுள்ளனர். தங்களது செயற்பாட்டாளர் களில் சிலர் தலைமறைவாக உள்ளதாக அண்மையில் பத்திரிகையா ளர்களிடம் சனாதன் சன்ஸ்தா அமைப்பின் தலை வர் சஞ்சய் புனலேகர் வெளிப்படையாக கூறினார்.

யார் இந்த சனாதன் சன்ஸ்தா?

கவுரி லங்கேஷ் கொலையில் காவல் துறையினர் வெளிப்படுத்திய தகவல்கள் மூலம் இந்துத்துவ தீவிரவாத அமைப் பான சனாதன் சன்ஸ்தாவின் முகம் தெளி வாகியுள்ளது. தபோல்கர் கொலை யில் இந்த அமைப்புடன் தொடர்புள்ள ஜன ஜாக்ருதி சமிதி (எச்ஜெஎஸ்) தலைவர் டாக்டர் வீரேந்திரதவாடே யும், பன்சாரே கொலையில் சனாதன் சன்ஸ்தாவின் உறுப்பினர் சமீர் கெய்க் வாட்டும் கைது செய்யப்பட்டனர். மகாராட்டிரா, கோவா எல்லைப் பகுதியில் 1990 இல் சனாதன் சன்ஸ்தா அமைப்பு உரு வாக்கப்பபட்டது. இந்த அமைப்பு கோவாவை தளமாக கொண்டு செயல் படுகிறது. ஹிப்னாட்டிக் தெராபிஸ்டான ஜெயந்த் பாலாஜி அதாவலே இந்த அமைப் பின் நிறுவனர். ஆர்எஸ்எஸ் போலவே இந்துநாடு நிறுவ வேண்டும் என்பது இந்த அமைப்பின் லட்சியம். மதத்தை பாது காக்க நக்சல்களைப்போல் செயல்பட வேண்டும் என பிரகடனம் செய்துள்ளனர். 2008 இல் மும்பையில் வாஸி, தானே, பன்வேல் போன்ற இடங்களில் நடந்தகுண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்துஇந்த அமைப்பு வெளி உலகுக்கு தெரியவந்தது.

கோவாவில் கிறிஸ்தூன் தேவாலயத் தில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இந்த அமைப்புக்கு தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. மட்கா வில் நரகாசுரன் சிலை வைப்பதை எதிர்த்த இந்த அமைப்பின் தலைவர்கள் மல்கோண்ட பாட்டீலும், யோகேஷ் நாயக்கும் இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டுகளுடன் அங்கு சென்ற போதுஅது வெடித்ததில் இருவரும் பலியானார்கள். 2011இல் இந்த அமைப்பை தடை செய்யுமாறு கோரிக்கை எழுந்தது.

ஆனாலும் இதுவரை தடை செய்யப் படவில்லை.

கோவிந்த பன்சாரே   மற்றும் நரேந்திர தாபோல்கர் கொலை வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்துள்ள வீரேந்திர தவாடே என்பவரின் நாட்குறிப்பில் வெளி வந்த தகவலானது:

இந்து  ராணுவம்

இந்தியாவில் இந்து மத விரோதி களைக் கொல்லுவதற்கு புதிய ராணு வம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் கைப்பற்றிய ஆவணங்களில் இருந்து சுமார் 17000 பேர்கள் கொண்ட பட்டியல் ஒன்று உள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் தாங்கள் "இந்து மதபாதுகாப்பிற்காக உயிர்க் கொடையளிக்க தயாராக இருக்கிறோம்" என்று உறுதிமொழி எடுத்துள்ளதாக  விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பகுத்தறிவாளர்கள் பெயர்கள்

மேலும் சிபிஅய் வசம் உள்ள ஆவணங் களில் கொலை செய்யப்பட வேண்டிய நபர்களின் விவரம் தானவ் -அரக்கர்கள் என்ற சுட்டுப் பெயரிடப்பட்டு உள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவில் உள்ள பிரபல பகுத்தறிவுவாதிகளது பெயர்கள் உள்ளன. இந்தப் பட்டியலையும் சிபிஅய் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளிக்க சில காவல் துறையினர் முன்வந்துள்ளது அறியப் பட்டுள்ளது. அந்தக் காவல் துறையினரின் பெயர்ப் பட்டியலும் நீதிமன்றத்திடம் ஒப் படைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் மீதான விசாரணை நீதிமன்ற ஒப்புதலுக்குப் பிறகு நடைபெறும் என்று சிபிஅய் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்து தானவ் சேனாவிற்கான ஆயுதம் மற்றும் இதர செலவுகளுக்கு இந்து அல்லாத தொழிலதிபர்களை கடத்தியும், தொழில் நிறுவனங்களில் கொள்ளையடித்தும் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதும், மகா பாரதத்தில் உள்ள போர்ப்படை தாக்குதல் நுணுக்கம் மற்றும் தற்போது ஈராக் சிரியாவில் நடை பெறும் போர் நடவடிக்கைகளைப் பதிந்து வைத்து வாரம் ஒருமுறை அந்த காணொலி களைப் பார்த்து எதிர்காலத்தில் எப்படி தாக் குதல் நடத்த வேண்டும் என்று திட்டமிட்ட தும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிபிஅய் நரேந்திர தாபோல்கர் கொலை வழக்கில் கைதான வர்களின் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த போதிலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் மீண்டும் மீண்டும் இது போன்ற கொலைகள் தொடர்ந்து நடந்து வரு கின்றன. மேலே கூறப்பட்ட அய்ந்து நபர் களைக் குறித்து தகவல் கூறுபவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் பரிசு வழக்கப்படும் என்று சிபிஅய்-ஆல் அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப் பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner