எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, அக்.8 தாழ்த் தப்பட்டோருக்கு எதிராக கொடுமைகள் அதிகம் நடக்கும் மாநிலங்கள் பட்டியலில், குஜராத், அய்ந்தாம் இடத்தை பெற்றுள்ளது.

நாடு முழுவதும், 26 மாநி லங்கள் மற்றும் யூனியன் பிர தேசங்களில், தாழ்த்தப்பட்டோ ருக்கு எதிராக கொடுமைகள் நடப்பது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், அதிகபட்சமாக, 45.1 சதவீத குற்றங்கள் நடக் கும், ம.பி., முதல் இடத்தில் உள்ளது. பிரதமர், நரேந்திர மோடியின் சொந்த மாநில மான, குஜராத், தாழ்த்தப்பட் டோருக்கு எதிராக, 32.5 சதவீத குற்றங்களுடன், அய்ந்தாமி டத்தை பிடித்து உள்ளது. தேசிய அளவில், தாழ்த்தப்பட் டோருக்கு எதிராக, 20.4 சதவீத குற்றங்கள் நடப்பதாக ஆய்வில் தெரிய வந்து உள்ளது. இதில், 4.7 சதவீத குற்றங்கள் நிரூபிக் கப்பட்டுள்ளன. குஜராத்தில், இம்மாத துவக்கத்தில், 'கர்பா' எனப்படும், பாரம்பரிய நட னத்தை கண்டுகளித்த, தாழ்த் தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை, மேல் ஜாதியை சேர்ந்தவர்கள் அடித்து, நொறுக்கிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காந்திநகர் மாவட்டத்தில்நடந்த மற்றொரு சம்பவத்தில், மீசை வைத்திருந்த, தாழ்த்தப்பட்ட வரை ராஜ்புத் எனப்படும் ஜாதியை சேர்ந்தவர்கள் அடித்து, உதைத்த சம்பவம், சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இதை கண்டித்து, குஜராத் மாநில தலைமைச் செயலகம் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய தலை வர், ஜகதீஸ் மேவானியை காவல்துறையினர் கைது செய் தனர். மாநிலங்களவையில் ஜூலை, 26ல், தாக்கல் செய் யப்பட்ட ஒரு அறிக்கையில், குஜராத்தில், 2016இல், தாழ்த் தப்பட்டவர்களுக்கு எதிராக, 1,321 குற்றங்கள் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதி ரான குற்றங்கள், 31 சதவீதம் அதிகரித்துள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner