எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி டில்லியில்

தமிழக விவசாயிகள் போராட்டம் நீடிப்பு

புதுடில்லி, அக்.8 காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், பயிர்க்கடன் தள் ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவ சாயிகள் டில்லியில் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின் றனர்.

இந்த போராட்டத்தின் 84-ஆவது நாளான நேற்று  (7.10.2017) சவரம் செய்யும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

விவசாயிகள் கடனுக்கு அடமானம் வைத்த நிலங் களை வங்கி அதிகாரிகள் பறிமுதல்  செய்து ஏல நட வடிக்கை எடுத்திருக்கும் நிலையில், அதை அரசு தடுக் காததால் விவசாயிகள் முடி திருத்தும் தொழிலுக்கு மாறிவிட்டனர் என்பதை சித்தரிக் கும் வகையில் இந்த போராட் டம் நடத்தப்பட்டதாக விவ சாயிகள் தரப்பில் கூறப் பட்டது.  தமிழக விவசாயிகள் குழுமி இருக்கும் ஜந்தர் மந்தர் சாலையில் போராட் டம் நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து இருக்கிறது. எனினும் அங்கு தமிழக விவசாயிகள் மற்றும் வேறு சில மாநிலத் தினரின் போராட்டம் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது இதுதானோ!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினிக்குப் பரோல் மறுப்பாம், என்ன காரணம் தெரியுமா? அவருக்குச் சொந்த வீடு கிடையாதாம்!

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் - இருப் பவர்களுக்கு வேறு ஒரு சட்டமா?

இதுதான் சுதந்திர இந்தியாவா? எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதற்கு அர்த்தமும் இதுதானா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner