எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஊழல் ஒழிப்பு இலட்சணம் இதுதான்!

கடந்த 3 ஆண்டுகளில் அமித்ஷா மகன் வருவாய் 16 ஆயிரம் மடங்கு  உயர்வாம்!

புதுடில்லி, அக்.9 பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய், தனது நிறுவனம் மூலம், கடந்த 3 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டிய கட்டுரை ஒன்றை “தி வயர்’’ என்ற வெப்சைட் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்கட்டுரை வருமாறு:

இவர் டெம்பிள் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை கடந்த 2004இல் தொடங்கியுள்ளார். 2015ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் விற்பனை வெறும் ரூ.50 ஆயிரம் என்ற அளவில் தான் இருந்துள்ளது. ஆனால் 2016ஆம் ஆண்டு இதன் விற்பனை திடீரென்று 16,000 மடங்கு அதிகரித்து ரூ.80 கோடியாக உயர்கிறது.  இதில் ரூ.51 கோடி வெளி நாட்டு  வர்த்தக வருவாய் என கணக்கு காட்டப்பட்டுள்ளது. பின் நட்டக் கணக்கு காட்டப்பட்டு அந்த நிறுவனம் மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு குசூம் பின்சர்வ் என்ற பங்கு வர்த்தக நிறுவனம் தொடங்கப் படுகிறது. இதில் ஜெய்க்கு 60 சதவீத பங்குகள் உள்ளன.

இதற்கு பல நிறுவனங்கள் கோடிக் கணக்கில் கடன் அளிக்கின்றன. இந் நிறுவனம் மத்தியப் பிரதேசத்தில் ரூ.15 கோடி மதிப்பில் காற்றாலை ஒன்றை அமைக்கிறது. இதற்கு கூட்டுறவு வங்கி ரூ.25 கோடி கடன் அளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி கழகம் (அய்ஆர்இடிஏ) ரூ.10.35 கோடி கடன் வழங்கியுள்ளது. மத்திய எரிசக்தி துறை அமைச்சராக பியூஷ் கோயல் இருந்தபோது இந்த கடன் வழங்கப் பட்டுள்ளது.

எங்கள் ஆட்சியில் எந்த ஊழலுமே நடை பெறவில்லை என கூறிவந்த பா.ஜ கட்சிக்கு இந்த விவகாரம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இதை கையில் எடுத்துள்ள எதிர்க்கட் சிகள் பிரதமர் மோடியிடம் சரமாரி யாகக் கேள்வி எழுப்பியுள்ளன.

காங்கிரஸ்

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறுகையில், “இந்த நட்பு, முத லாளித்துவம் பற்றி பிரதமர் மோடி என்ன சொல்லப்போகிறார்? சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிடுவாரா? அம லாக்கப் பிரிவினரிடம் கூறி சம்பந்தப் பட்டவர்களை கைது செய்யச் சொல் வாரா?’’ என கேட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூ.

மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி டிவிட்டரில் விடுத்துள்ள செய் தியில்,  “இது மோடி அரசின் சமீபத்திய ஊழல். பிர்லா-சகாரா பால்பண்ணை, வியாபம், லலித்மோடி, ஜிஎஸ்பிசிஎல், அரிசி மற்றும் சுரங்க முறைகேடு என மோடி அரசில் ஏற்கெனவே பல ஊழல்கள் நடந்துள்ளன. பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்?” என கேள்வி எழுப்பி யுள்ளார்.

ஆம் ஆத்மி

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசா ரணை நடத்த வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner