எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மும்பை, அக்.9 மகாராட்டிர மாநிலத் தில் மும்பையில் பிறந்த குழந்தைகள் விற்பனை செய்யப்படுகின்ற அவலம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. குழந்தை கள் விற்பனைகுறித்து வடாலா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

வொர்லி பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவருக்கும், பெங்களூரு நகரில் கணினி பொறியாளராக உள்ள ஒருவ ருக்கும், மும்பையை அடுத்துள்ள தானே பகுதியில்  உள்ள மகப்பேறு மருத்துவர் மற்றும் குழந்தைகள் மருத்துவராக உள்ள தம்பதியருக்கு பிறந்த குழந்தைகள் ரூ.4லட்சத்து 50 ஆயிரம் விலையில் விற் பனை செய்யப்பட்டுள்ளது காவல்துறை யின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மும்பை வொர்லி பகுதியைச் சேர்ந்த ஜூலியா பெர்ணாண்டஸ்  (வயது 29) என்பவரை குழந்தை கடத்தல்வழக்கில் வடாலா காவல்துறையினர் கைது செய் தனர். அவர் பிறந்து ஏழு நாள்களேயான  குழந்தையை ரூ.20 ஆயிரத்துக்கு முன்னா ஷெயிக், ஷாசியா தம்பதியினரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி, அக்குழந் தையை ஒன்றரை லட்சத்துக்கு விற்பனை செய்ய முயன்றார். அப்போது காவல் துறையினரிடம் பிடிபட்டார். குழந் தைக்கு அதிராஜ் என்று பெயரிடப்பட்டு குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பப் பட்டது. குழந்தையின் தந்தை ஷெயிக் தன்னுடைய ஒரு லட்சம் கடனுக்காக குழந்தையை விற்றதாகக் கூறினார். கைதுசெய்யப்பட்ட ஷெயிக் சிறையிலடைக்கப்பட்டார்.

பெங்களூருவைச் சேர்ந்த கணினி பொறியாளர் ரூ. 4லட்சத்து 50 ஆயிரமும், தானே மருத்துவத் தம்பதி ரூ.4 லட்சத் துக்கும் குழந்தையை விலைகொடுத்து வாங்கியுள்ளனர். வொர்லி பகுதியைச் சேர்ந்த மருத்துவர் எவ்வளவு தொகை கொடுத்தார் எனும் தகவல் வெளியாக வில்லை. மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றவர் ஜூலியா. மருத்துவர் குழந்தையில்லாமல் இருப்பதைக் கண்டு குழந்தை விற்பனைத் திட்டத்தைத் தீட்டியுள்ளார். ஆனால், ஜூலியாவின் வங்கிக் கணக் கில் பணம் போடப்பட்டதாக தகவல் இல்லை.

இந்நிலையில்  பெங்களூரு மற்றும் டில்லிக்கு சென்ற காவல்துறை குழு குழந்தை கடத்தல்காரர்கள் மற்றும் விலை கொடுத்து வாங்குவோர் குறித்து விசாரணை செய்து வருகிறது. காணாமற் போன 50 முதல் 60 குழந்தைகளின் படங் களை சேகரித்துள்ளது. குழந்தைகளின் படங்களைக்கொண்டு, குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டனரா என்பது உள்ளிட்ட விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

குழந்தைகளை தத்து எடுப்பதில் நீண்ட காலமாக காத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுபோன்ற குழந்தைகள் விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner