எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்லம், அக் 9 கேர ளத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள  குடியரசுத் தலை வர் ராம்நாத் கோவிந்த் பெண் சாமியார் அமிர்தானந்தாவின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது "ராணு வம், மதகுருக்களே இருவரும்  இந்த நாட்டின் தூண்கள், இவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையால் தான் இந்த நாடு இன்றும் நிலைத்து நிற் கிறது"  என்று கூறினார்.

கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் வல்லிக்காவு என்ற இடத்தில் அமிர்தானந்தா என்ற பெண் சாமியரின் மடம் உள்ளது. இந்த மடத்தின் மூலம் 100 கோடி ரூபாய் செல வில் இந்தியாவின் நகர்ப்புற மல்லாத பகுதிகளில் தூய குடிநீர் வழங்கும் திட்டத்தைத் துவக்கிவைக்க  சமீபத்தில் ஆப் பிரிக்க நாடுகளுக்கு பயணம் சென்ற குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஓய்வு கூட எடுக்காமல் உடனடியாக கேரள வருகை புரிந்தார். அப் போது அவர் பேசியதாவது:

இரண்டு தூண்கள்

"கேரள பல்வேறு மதங் களின் வாழிடமாக உள்ளது. நூற்றாண்டு முதல் கேரளாவில் பல்வேறு மதத்தவர்கள் ஒற்று மையாக வாழ்ந்துவருகின்றனர். கேரளா இந்த உலகத்திற்கு மத ஒற்றுமைக்கு அடையாளமாகத் திகழ்கிறது. தூய்மைக்கு இலக் கணமாக இந்தியாவில் உள்ள ஒரே ஒரு மாநிலம் கேரளமா கும். நான் குடியரசுத்தலைவராக பதவியேற்றபிறகு முதல் முத லாக லடாக் பகுதிக்குச் சென்று ராணுவ வீரர்களைச் சந்தித் தேன்; ஒருபுறம் நமது நாட்டு ராணுவ வீரர்கள் நமது நாட்டு எல்லைகளை மிகவும் சிரமத் திற்கிடையில் கண்காணித்து வருகின்றனர். மறு புறம் ஆன்மீக குருக்கள் நமது நாட்டு மக்களின் மனதில் ஆன்மீக உணர்வுகளை விதைத்து அமை தியான ஒரு சூழலை உருவாக் குகிறார்கள்.  ஆன்மீக குருக் களின் கருணை, ராணுவ வீரர் களின் வீரம் இந்த இரண்டும் நமது நாட்டின் இரு தூண்கள் போன்றவை.

கேரளா நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் மக்களாட் சிக்குப் பலவிதங்களில் பங் காற்றியுள்ளது. கேரளாவில் இசுலாமிய நாடுகளைத்தவிர்த்து முதல் முதலாக இசுலாமிய வழிபாட்டுத்தலம் கட்டப்பட் டது. 7 ஆம் நூற்றாண்டில் வணிகம் புரியவந்த அரபு வணிகர்கள் தங்களின் மத வழிபாட்டை சிரமமின்றி நடத் திக்கொள்ள அப்போது கேர ளத்தை ஆண்ட மன்னர்கள் தங்களின் செலவில் இசுலாமிய வழிபாட்டுத்தலம் அமைத்துக் கொடுத்தனர். கேரளாவில் யூதர் கள் கிறிசுதுவின் பிறப்பிற்கு முன்பே இங்குவந்து வசித்து வருகின்றனர்.

கேரளாவில் பல மதநம் பிக்கைகள் கொண்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர் கள் அனைவரும் அவரவரது மத உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஒற்றுமையுணர்வுடன் வாழ்கின்றனர். மாதா அமிர் தானந்தா என்ற அம்மா போன்று நாட்டில் பல மத குருக்கள் வாழ்கின்றனர். அவர் களது அமைப்புகள் நடத்தும் பல்வேறு இயக்கங்கள் மூலம் நாட்டில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன" என்று பேசினார்.

முன்னதாக கேரள விமான நிலையத்தில் வருகைபுரிந்த குடியரசுத் தலைவர் கொட்டும் மழையிலும் ராணுவ வீரர் களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. சதா சிவம் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner