எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

எடியூரப்பா, ஆனந்தகுமாரிடையே

நடைபெற்ற உரையாடல் அம்பலம்

பெங்களூரு, அக். 9 கருநாடக மாநில பாஜக தலைவர் பி.எடியூரப்பா, மத்திய உரத்துறை அமைச்சர் எச்.என்.ஆனந்த குமார் ஆகியோர் கடந்த பிப்ரவரியில்  பாஜக தலைவர்களுக்கு கோடிக்கணக்கான பணம் அளித்ததுகுறித்து காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு விசாரணை செய்து வருகிறது.

அவ்விருவரும் பேசிய பேச்சின் குறுந்தகடு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு, அந்த உரையாடலில் உள்ள பேச்சு எடியூரப்பா மற்றும் ஆனந்த் குமாருடையதுதான் என்று ஆய்வக முடிவு வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம் 7ஆம் நாளன்று பெங்களூரு பெருநகர நீதிமன்றம் எடியூரப்பா, ஆனந்தகுமார் ஆகியோரை காவல்துறையினர் முன்பாக ஆஜராகி குரல் பதிவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி குறுந்தகடுகளில் அவ்விருவரின் குரல்கள் பதிவு செய்யப்பட்டன. பாஜக தலைவர்களுக்கு கோடிக்கணக்கான பணம் வழங்கியது தொடர்பான உரையாடல் குறுந்தகட்டில் உள்ள குரல் பதிவுடன், அவ்விருவரின் குரல்களும் ஒத்துப்போயுள்ளது ஆய்வக முடிவில் தெரிய வந்துள்ளது. 4.10.2017 அன்று தடயவியல் அறிவியல் ஆய்வகம் அதன் அறிக்கையை அளித்துள்ளது.

ஊழல் எதிர்ப்பு ஆணையத்தில் எடியூரப்பாமீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், எடியூரப்பா மற்றும் ஆனந்தகுமார் ஆகிய இருவர்மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று ஊழல் எதிர்ப்பு ஆணையம் மறுத்துள்ளது. பாஜக தலைவர்களுக்கு கோடிக் கணக்கான ரூபாய் பணம் அளித்தது தொடர்பாக எடியூரப்பாவும், மத்திய அமைச்சர் ஆனந்தகுமாரும் பேசியது தற்போது நிரூ பணம் ஆகியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner