எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

டில்லி, அக்.9  தீபாவளி முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று டில்லி மக்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட் டுள்ளனர். பட்டாசுகளை வெடிப்பதால் காற்று மாசுப்படுவதால் டில்லியில் பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தடை விதித்தது. மேலும் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவதும் நிறுத்தப்பட்டது.

எனினும் பட்டாசுகளை வெடிப்பதை தடுக்கவோ அல்லது கண்காணிக்கவோ முடியாததால் அதற்கு தடை ஏதும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. காற்று மாசு ஏற்படும் விதத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டது. பட்டாசு விற்பனைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் இந்த தடைகளை தற்காலிகமாக திரும்பப் பெற்றது.

இந்நிலையில் பட்டாசுகளை வெடிப்பதால் காற்று மாசு ஏற் படுகிறது என்றும், வரும் 2030-இல் உலகிலேயே காற்று மாசு உள்ள நகரமாக டில்லி முன்னிலை வகிக்கும் என்றும் இதனால் ஏராளமானோர் உயிரிழக்க நேரிடும் என்றும், சங்கர் நாராயணன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது இன்று நீதிபதிகள் அசோக் பூஷன், ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பட்டாசுகளுக்கு கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்தனர். அதன்படி இந்த மாதம் இறுதி வரை டில்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கவும், விற்கவும், உரிமம் வழங்கவும் தடை விதித்து உத்தரவிட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner