எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மும்பை, அக்.9 பா.ஜ கட்சிக்கு துணிச்சல் இருந்தால் தேவேந்திர பட்நவிஸ் தலை மையிலான அரசு பதவியில் இருந்து விலகி விட்டு மகா ராஷ்டிராவில் இடைத்தேர் தலை சந்திக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே  சவால் விடுத் துள்ளார்.

மகாராஷ்டிராவிலும் மத்தி யிலும் பா.ஜ தலைமையிலான கூட்டணி ஆட்சியில் சிவசேனா இடம்பெற்றிருந்தாலும், மத்திய, மாநில அரசுகளை அந்த கட்சி தொடர்ந்து விமர் சித்து வருகிறது. இந்த நிலை யில் மகாராஷ்டிராவின் நாண் டெட்-வாஹாலா மாநகராட்சி தேர்தலுக்கான சிவசேனா கட் சியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று மாலை நாண்டெட் நகரில் நடந்தது. இதில் உத்தவ் தாக்கரே பேசியதாவது; தேசிய வாத காங்கிரசுடன் ரகசிய உறவு வைத்திருக்கும் தைரியத் தில் மகாராஷ்டிராவில் 5 ஆண்டு முழுவதும் பதவியில் நீடிக்கும் என்று முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கூறியிருக்கிறார்.

உண்மையிலேயே பா.ஜ. வுக்கு துணிச்சல் இருந்தால் பதவி விலகி விட்டு மகாராஷ் டிராவில் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும்.  காங்கிரசு கட்சிக்கு நாங்கள் ரகசியமாக உதவுவதாக பா.ஜ.வினர் கூறி யுள்ளனர். நம்பியவர்களுக்கு துரோகம் செய்யும் ரத்தம் எங்கள் உடலில் ஓடவில்லை. பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த ஜூனில் முதல்வர் அறிவித்த நிலையில் இதுவரை கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.  மகாராஷ்டிராவில் 5 மணிநேர மின்வெட்டு அமல்படுத்தப்பட் டிருக்கிறது.  அடுத்த 2 மாதங் களில் சட்டப்பேரவை தேர் தலை சந்திக்கவிருக்கும் நிலை யில் குஜராத்தில் தான் படித்த பள்ளியின் ஞாபகம் பிரத மருக்கு வந்திருக்கிறது.  இவ் வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner