எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிருந்தாவன், அக்.10 மத்திய பா.ஜ.க. அரசு அனைத்து நிலை களிலும் தோல்வி அடைந்துள் ளது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனில் உணவுக் கூடம் ஒன்றின் அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

மத்தியில் உள்ள பாஜக அரசு நாட்டு மக்களை பல வகைகளில் துன்பப்படுத்தி வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளனர்; சிறு, குறு தொழில்கள் நசிந்துவிட்டன; பல இளை ஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். குறிப்பாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை யால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்திருக் கிறது.

ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி ஆகிய வற்றின் எதிர்மறை விளை வுகளை ஏற்க பிரதமர் மோடி தயாராக இல்லை. அதே சமயத்தில், தமது இந்த நடவடிக்கைகளால் நல்ல பலன்கள் கிடைத்திருப்பதாக அவர் கூறி வருகிறார். பொரு ளாதாரம் சீர்குலைந்ததும், தொழில்துறைகள் நலிவடைந் ததும்தான் அந்த நல்ல பலன்களா? மோடியின் இந்தப் பேச்சானது மக்கள் படும் துய ரங்களை கேலி செய்வதுபோல் உள்ளது.

வருகிற 2022-ஆம் ஆண்டுக் குள்ளாக, நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக மோடி உறுதியளித்தார். ஆனால், விவ சாயிகளின் வருமானம் முன்பு இருந்ததைக் காட்டிலும் தற் போது இரண்டு மடங்கு குறைந்துவிட்டது. இதுபோல், அனைத்து நிலைகளிலும் பாஜக அரசு தோல்வியடைந் துள்ளது. இதற்கான விலையை வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வழங்கும் என்றார் அகிலேஷ் யாதவ்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner