எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பா.ஜ.க. கூட்டணி கட்சி சிவசேனை விமர்சனம்ஆமதாபாத், அக்.10 குஜ ராத் சட்டப் பேரவைக்கு விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலை கவனத்தில் கொண்டே, பொது நுகர்வு தொடர்புடைய சில குறிப்பிட்ட பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி விகி தத்தை மத்திய அரசு குறைத் துள்ளது என்று சிவசேனை கட்சி விமர்சித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சாம்னா'வில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:

உயர்மதிப்பு ரூபாய் மதிப் பிழப்பு எனும் கோடாரியை செலுத்திய பிறகு, நாட்டின் பொருளாதாரம் மீளவேயில்லை. இதையடுத்து, உறங்கிய நமது நாட்டு பொருளாதாரம் மீது ஜிஎஸ்டி எனும் ஆயுதம் பயன் படுத்தப்பட்டது. இதனால் பணவீக்கம் உயர்ந்தது.

எனினும், குஜராத் சட்டப் பேரவைக்கு விரைவில் தேர் தல் நடைபெறவிருக்கிறது. இதை மனதில் கொண்டு, குஜ ராத் வாக்காளர்களை சமா தானம் செய்யும் வகையில், பொது நுகர்வு தொடர்பான சில குறிப்பிட்ட பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைத்ததன் மூலம், மத்திய அரசு தனது ஆணவமான போக்கை தள்ளிவைத்து விட்டு, தலைவணங்கியுள்ளது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப் பட்ட பிறகு, மக்களிடையே ஆத்திரம் பற்றி எரியத் தொடங் கியுள்ளது. எனவே, குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய விலை கொடுத்து விடக் கூடாது என்ற காரணத் துக்காக (பாஜகவுக்கு தோல்வி வந்துவிடக் கூடாது என்பதற் காக) ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைப்பது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத், சூரத், ராஜ்கோட்டில் இருக்கும் சிறிய, நடுத்தர வியாபாரிகள், ஜிஎஸ் டிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இதனால், குஜ ராத்தில் அந்த மாநிலத்தை ஆளும் பாஜக அரசுக்கு எதி ரான சூழல் உருவாகியுள்ளது. இதுவே, ஜிஎஸ்டி வரி விகி தத்தை குறைப்பது தொடர் பான முடிவை எடுக்கும் சூழ் நிலைக்கு மத்திய அரசை தள்ளியது. குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட் டால், பணவீக்கம் உயரும், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு குரல் எழுப்பினார். ஆனால், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும், ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. அப் போது தனது எதிர்ப்பு நிலைப் பாட்டில் இருந்து மோடி பின்வாங்கினார். உயர்மதிப்பு ரூபாய் மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி அமல் ஆகிய முடிவுகள், நமது நாட்டின் பொருளா தாரத்தை சீர்குலைத்து விட் டன என்று அந்த தலையங்கத் தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner