எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, அக்.10 'வேறு மதத்தைச் சேர்ந்த பெண், ஹிந்து மதத்தவரை திருமணம் செய்த பின், ஹிந்து மதத்தைச் சேர்ந்த வராக கருதப்படுவது சரியா என்பது குறித்த வழக்கை, அய்ந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரிக் கும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

குஜராத்தில் வசிக்கும், பார்சி மதத்தைச் சேர்ந்த பெண், குல் ரோக். இந்து மதத்தைச் சேர்ந்த, மகிபால் குப்தா என்பவரை, திருமணம் செய்தார். இதனால் அவர், ஹிந்துவாக மாறிவிட்டார் எனக்கூறி, தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிக் கப்படவில்லை.  இதை தொடர்ந்து, பார்சி மதத்தை, தொடர்ந்து பின்பற்ற அனுமதிக் கக் கோரி, குல்ரோக், குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'சிறப்பு திருமண சட்டப்படி, பார்சி மதத்தைச் சேர்ந்த பெண், இந்து மதத்தவரை திருமணம் செய்த பின், இந்து மதத்தைச் சேர்ந்த வராகவே கருதப்படுவார்' என, தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில், குல்ரோக் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி, தீபக் மிசுரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பார்சி மத பெண், இந்து மதத் தவரை திருமணம் செய்த பின், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக கருதப்படுவார் என்பதை, அய்ந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரித்து முடிவு செய்யும்.

மதக் கோட்பாடு தொடர்பான வழக்காக இருப்பதால், 'முத்த லாக்' வழக்கை விசாரித்த, அரசி யல் சாசன அமர்வு, இந்த வழக் கையும் விசாரிக்கும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner