எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உ.பி.யில் தொடரும் அவலம்

73 குழந்தைகள் உயிரிழப்பைத் தொடர்ந்து

மீண்டும் 16 குழந்தைகள் பலி

கோரக்பூர், அக்.10 உ.பி.,யில், குழந்தைகள் பலியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, கோரக்பூர் மருத்துவமனையில், மீண்டும், 16 குழந்தைகள் உயிரிழந்து உள்ளன.

உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல் வராக உள்ளார். இங்குள்ள, கோரக்பூர் மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால், 73 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, குழந்தைகள் இறப்பை தடுக்க, உ.பி., அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியது. அரசு மருத்துவமனைகளில், போதிய உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், கோரக்பூர் மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில், மீண்டும், 16 குழந்தைகள் இறந்துள்ளன.

இது குறித்து, அந்த மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது: கோரக்பூர் மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில், சமீபத்தில், 16 குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. குழந்தைகளின் உயிரிழப்புக்கு, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமல்ல; அது போலவே, உரிய சிகிச்சையும் வழங்கி உள்ளோம். அந்த குழந்தைகள், கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், இங்கு அழைத்து வரப்பட்டன. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


மக்கள் சொல்வதை கேட்க மோடி அரசுக்கு தைரியம் இல்லை : ராகுல் காந்தி  குற்றச்சாட்டு

நடியாத், அக்.10 மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மக்கள் சொல்வதைக் கேட்க தைரியம் இல்லாமல் உள்ளது. அதேவேளையில் முதலாளி நண்பர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று காங்கிரசு துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ராகுல் காந்தி அங்கு தீவிர பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார். கெதா, மற்றும் நடியாத் நகரில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பண மதிப்பிழப்பு நடவடிக்கையாகட்டும் அல்லது ஜிஎஸ்டி வரி விதிப்பாகட்டும், யார் சொல்வதையும் கேட்காமல் மோடி அமல்படுத்தி விட்டார். காங்கிரசு ஆட்சியில் இந்த நிலை இல்லை. விவசாயிகள், தொழிலாளிகள், பெண்கள், சிறு வியாபாரிகள் என அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் காங்கிரசு அரசு கேட்கும். ஆனால், கடந்த 22 ஆண்டுகளாக குஜராத்தில் மக்கள் சொல்வதை பாஜக அரசு கேட்கவில்லை.பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பலனடைந்தது பாஜக மட்டும்தான். பண மதிப்பிழப்பால் ஏராளமான சிறு வர்த்தகம் அழிந்துவிட்டது. அவற்றின் சாம்பலில் இருந்துதான் பெரும் கம்பெனிகள் தலையெடுத்துள் ளன. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.


பல்கலைக்கழகங்களுக்கு மதரீதியாக வைக்கப்பட்டுள்ள  பெயர்களை நீக்க பரிந்துரை

புதுடில்லி, அக்.10 பல்கலைக்கழகங்கள் பெயரில் இந்து, முஸ்லிம் என்ற மத ரீதியான வார்த்தைகளை நீக்க பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விசாரணைக் குழு ஒன்று பரிந்துரை செய்துள்ளது.பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், அலிகர் முசுலிம் பல்கலைக் கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உட்பட 10 மத்திய பல்கலைக்கழகங்களில் முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க யுஜிசி சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகங்களில் யூஜிசி குழு பலகட்ட விசாரணை நடத்தியது. இதில் அலிகர் முஸ்லிம் பல்கலை.யின் தணிக்கை அறிக்கையில் இக்குழு தனது பரிந்துரைகளை அளித்துள்ளது.

மத்திய அரசின் நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்கள் மதச்சார்பற்ற நிறுவனங்களாக இருக்க வேண்டும். ஆனால், அலிகர் முசுலிம் பல்கலை., பனாரஸ் இந்து பல்கலை. ஆகிய வற்றின் பெயர்களில் உள்ள இந்து, முசுலிம் ஆகிய வார்த்தைகள் மதச்சார்பற்ற தன்மையை பிரதிபலிக்கவில்லை. எனவே, மதத்தின் பெயர்களை குறிப்பிடும் அந்த வார்த்தைகளை நீக்கி விட்டு அலிகர் பல்கலை., பனாரஸ் பல்கலை. என்று அழைக்க லாம். அல்லது இவற்றை நிறுவியவர்களின் பெயர்களை வைக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


சிறுமியிடம் பாலியல் வன்முறை : பாதிரியார் கைது

திருவனந்தபுரம், அக்.10 கேரள மாநில தலைநகர் திருவனந்த புரத்தில் உள்ள கன்டந்திட்டா பகுதியில் தென்னிந்திய திருச் சபையை சேர்ந்த கிறிஸ்தவ ஆலயத்தில் பைபிள் வகுப்புக்கு, அப்பகுதியை பத்து வயது சிறுமி நேற்று சென்றாள்.

தனது மகளை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக அங்கு வந்த அவளது தந்தை, அந்த சிறுமியை அங்கு பணியாற்றும் பாதிரியார் பாலியல் வன்முறை செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக, அவர் அளித்த புகாரின் அடிப்ப டையில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவலர்கள் பாதிரியார் தேவராஜ்(65) என்பவரை கைது செய்து,   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


கடவுள் சக்தியைப் பாரீர்....

3 அய்ம்பொன் சிலைகள் கொள்ளை

ஆம்பூர், அக்.10 வேலுர் மாவட்டம், ஆம்பூர் அருகே, பள்ளிகுப்பம், பூமாலை கிராமத்தில், பழமையான முருகன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு பூசாரி சண்முகம், கோவிலை பூட்டிச் சென்றார். நேற்று காலை, 8:00 மணிக்கு கோவிலை திறக்க வந்த போது, கோவிலில் இருந்த அய்ம்பொன்னால் ஆன,  அடி உயரமுள்ள வள்ளி, தெய்வானை,  அடி உயரமுள்ள முருகன் சிலையை சில நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது; இவற்றின் மதிப்பு, 20 லட்சம் ரூபாய் இருக்கும். ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner