எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஜெயங்கொண்டத்தில் உள்ள பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி கல்வி வளாகத்தில் இன்று (11.10.2017) காலை பெரியார் அறக்கட்டளை சார்பில் அகர்சந்த் மருத்துவமனை வளாகத்தினை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயலாளர் கி.வீரமணி அவர்களின் தலைமையில், தொண்டறச் செம்மல் ம.அகர்சந்த் (சிறீ ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர், விருத்தாசலம்)  அவர்கள் திறந்து வைத்தார். உடன் பெரியார் கல்விக் குழும ஆட்சி மன்றக் குழுத் தலைவர் வீ.அன்புராஜ், பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் கவுதமன், முனவர் சுல்தானா, மருத்துவர் செங்குட்டுவன், பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை, திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், ஜெயங்கொண்டம் காமராஜ், ப.சுப்பிரமணியன், பள்ளி முதல்வர் பால் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். அதற்கு முன்னதாக மருத்துவமனை திறப்பிற்கு வருகை புரிந்த ம.அகர்சந்த் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வரவேற்றார்.

ரூ.5 லட்சம் நன்கொடை


பெரியார் மருத்துவமனை பணிக்காக அகர்சந்த் (சிறீ ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர், விருத்தாசலம்) அவர்கள் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயலாளர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் கவுதமன், பெரியார் கல்விக் குழும ஆட்சி மன்றக் குழுத் தலைவர் வீ.அன்புராஜ் (ஜெயங்கொண்டம், 11.10.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner