எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, அக்.12 நரேந்திர மோடியின் தலைமையில் அமைந்துள்ள பி.ஜே.பி. அரசிற்கு பி.ஜே.பி.யின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சி டமிருந்தும் முக்கிய கூட்டணி கட்சியான சிவசேனாவிடமிருந்தும் கடும் எதிர்ப்புப் புயல் வெடித்துக் கிளம்பியுள்ளது.

பாரதீய ஜனதாவின் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். இதன் பிரிவுகள் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்தாலும்,அவரது அரசின் கொள்கைகளை எதிர்க்கத் தொடங்கியுள்ளன. கடந்த மாதம் மதுராவில் கூடிய ஆர்.எஸ்.எஸ். பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர்கள், மத்திய அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தனர். ‘‘வரும் 2019 மக்களவைத் தேர்தலில் மோடி யின் புகழால் மட்டும் பா.ஜ.க.வுக்கு வெற்றி கிடைக்காது. எனவே, மத்திய அரசு தனது கொள்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும்‘’ என்று வலியுறுத்திய இவர்கள், அதற்கான போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். பிரிவுகளில் ஒன்றான பாரதீய மஸ்தூர் சங் நவம்பர் 17 இல் மத்திய அரசை எதிர்த்து டில்லியில் போராட்டம் நடத்தியது. தற்போது சுதேசி ஜாக்ரன் மன்ச் அமைப்பு, டில்லி ராம் லீலா மைதானத்தில் 29 இல் போராட்டம் நடத்த உள்ளது.

இதுகுறித்து சுதேசி ஜாக்ரன்  மன்ச் சின் செய்திப் பிரிவின் தலைவர் தீபக்சர்மா கூறும்போது, ‘‘அரசின் பொருளாதாரக்கொள்கைகளால்ஏற் பட்டுள்ளபிரச்சினைகள்இந்த எதிர்ப்புக் கூட்டத்தில் எடுத்துரைக்கப் படும். குறிப்பாக சீனப் பொருள்கள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்களின் சேவைகளை புறக்கணிக்க வலி யுறுத்துவோம். சுதேசிப் பொருள்களை வாங்குவதால் மட்டுமே நாட்டில் வேலை வாய்ப்புகள் உருவாகும். டில்லி போராட்டத்திற்கு நாடு முழுவதில் இருந்தும் ஒன்றரை லட்சம் பேர் வருவதாக உறுதி அளித்துள்ளனர்’’ என்றார்.

இந்த எதிர்ப்புக் கூட்டத்தில் பா.ஜ.க.வின் விவசாயப் பிரிவு உள்பட வேறு பல அமைப்புகளும் பங்கேற்கின்றன.இதன்மூலம்மத்திய அரசின் கொள்கைகளை எதிர்க்கும் வர்த்தகம்,தொழில்மற்றும்விவசாய அமைப்புகளுக்கு ஒரு வாய்ப்பை தேடித்தருவது சுதேசி ஜாக்ரன் மன்ச் சின் நோக்கமாகும். ஜிஎஸ்டி உள்பட மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து அவற்றில் மாற்றம் கொண்டு வருவதும் இந்தப் போராட்டத்தின் குறிக்கோளாகும்.

ஆர்.எஸ்.எஸ். பிரிவுகளில் முக்கிய ஒன்றான சுதேசி ஜாக்ரன் மன்ச், பிரதமர் மோடி அரசை எதிர்ப்பது இது முதல் முறையல்ல. மோடி அரசு பதவியேற்ற புதிதில், அவசரச் சட்டமாக கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை முதல் அமைப்பாக எதிர்த்தது. இதையடுத்து முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வெளிநாட்டு தொழில் முதலீட்டு கொள்கையை பிரதமர் மோடி அரசும் பின்பற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

யார் துரோகி?

விளாசுகிறார் உத்தவ் தாக்கரே

பண மதிப்பு நீக்க நடவ டிக்கை செயல்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே லட்சக்கணக் கானோர் வேலையிழந்ததாகச்செய்திகள்வந் தன. கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள். அப்படியென்றால், சுமார் 60 லட்சம் பேர் நேரடியாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அர்த்தம். மக்களுக்குப் பெருந்துயர் அளித்த அந்த நடவடிக்கை அது நாள் கணக்கில் வங்கிகள், ஏடிஎம்கள் முன்னால் நின்ற பலர் மரணமடைந்தார்கள். இவர்களின் இறப்புக்கு யார் பொறுப்பு? புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைத் திரும் பப் பெற்றது பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை என்றார்கள். அது சாத்தியமென்றால், உலக நாடுகள் அனைத்தும் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்து, பயங்கரவாதத்தை வேரறுத்துவிடலாமே? உண்மையைச் சொல்வதால் எங்களைத் துரோகிகள் என்று சொல்வார்கள். வேலையிழந்து நிற்கும் மக்களிடம் போய்க் கேளுங் கள், யார் துரோகி என்று அவர்கள் சொல்வார்கள்.

சிவசேனா கட்சியின் தலைவர், உத்தவ்தாக்கரே பி.ஜே.பி.யின் முக்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner