எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஆர்.எஸ்.எஸ். இதழான விஜயபாரதத்தில் (13.10.2017, பக்கம் 32) கீழ்க்கண்ட தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

‘‘டிசம்பர் 24, 1973 இல் ஈ.வெ.ரா. அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடந்தபோது, தேசியக் கொடி அவரது பூத உடல்மீது போர்த்தப்பட்டது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகள் நடந்தது என்பது தவறானது. மேலும் தேசியக் கொடி போர்த்தப்பட்டது என்பதும் உண்மைக்கு மாறானதாகும்.

*****

அதேபோல, இன்றைய ‘தினமலர்’ 4 ஆம் பக்கத்தில்

‘‘ஈ.வெ.ரா.வுடன் ஒரு அரிய சந்திப்பு’’ எனும் தலைப்பில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

ஈ.வெ.ரா.வின் பிறந்த நாளில் அவரை திரு.ஆர்.ராகவனும் (நேற்று முதல் நாள் மறைந்தார்) அவரது அண்ணன் திரு.கிருஷ்ணமூர்த்தியும் திருச்சியில் சந்தித்ததாகவும், அப்பொழுது ஈ.வெ.ரா. அவர்கள், ‘விடுதலை’ மட்டுமல்ல, ‘தினமலரும்‘ நமது பேப்பர்தான் என்றும், ‘தினமலரை’ வாங்காதீர்கள், படிக்காதீர்கள் என்று எவராவது பிரச்சாரம் செய்தால், அவர்களை இயக்கத்திலிருந்தே நீக்கி விடுவோம் என்றும் சொன்னதாக ஒரு செய்தியை ‘தினமலர்’ இன்று வெளியிட்டுள்ளது.

அப்படி தந்தை பெரியார் சொல்லியிருந்தால், அப்பொழுது வெளிவந்த ‘தினமலரில்’ அந்தச் செய்தி வெளியிடப்பட்டதா? இவ்வளவு காலம் தாழ்த்தி சந்தித்தவர்களும், தந்தை பெரியாரும் மறைந்த இக்காலகட்டத்தில் வெளியிடுவது, நாகரிகமானதல்ல கண்டிக்கத்தக்கதே!

- கலி.பூங்குன்றன்,

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner