எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வரவேற்கத்தக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

பச்சிளம் பிராயத்தவர்கள் பாலியல் வன்கொடுமையிலிருந்து காப்பாற்றப்பட

சமூகநலப் பிரிவு காவல் குழு அமைக்கப்படவேண்டும்!

மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழர் தலைவர்

ஆசிரியர்  அறிக்கை

உச்சநீதிமன்றத் தீர்ப்பையொட்டி தமிழ்நாடு அரசு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஆணையைச் செயல்படுத்த முன்வரவேண்டும்

18 வயது இளம் மனைவியுடன் கட்டாய உடலுறவு வைத்துக்கொள்வது சட்டப்படிக் குற்றம் என அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும், இவை மீறப்பட்டு, பச்சிளம் பிராயத்தவர்கள் பாலியல் வன்கொடுமையிலிருந்து காப்பாற்றப்பட சமூகநலப் பிரிவு காவல் குழு ஒன்றை  மத்திய - மாநில அரசுகள் அமைக்க முன்வர வேண்டும் என்றும்   திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உச்சநீதிமன்றத் தீர்ப்பு

வரவேற்கத்தக்கதே!

குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதோடு, வயது பரி பக்குவமாகாத நிலையில், அத்தகு திருமண இளம் பிராயத்தினர் - அதாவது 15 வயதுக்குள்ளே உள்ள வர்கள் பாலுறவில் ஈடுபட்டால் அது வன்புணர்ச்சிக் குற்றமேயாகும் என்றும், ஏற்கெனவே இந்திய தண்டனைச் சட்டம் (அய்.பி.சி.) பாலியல் வன்முறை தொடர்பான சட்டம் 375 ஆவது பிரிவின் விதிவிலக்கு - 15 வயதைத் தாண்டிய இளம் மனைவியுடன் உடலுறவு வைத்துக்கொள்ள அனுமதிப்பதை ஏற்க வியலாது என்றும் நமது உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது! (அது வன்புணர்ச்சிக் குற்றம்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது).

பெண் விடுதலை, சுதந்திரம் என்பதில் இது ஓர் சிறப்பான மைல் கல் ஆகும்!

இந்தப் பிரிவு (இ.பி.கோ.375) கூட மற்ற திருமணத் தகுதிச் சட்டங்களுக்கும், இளையவர்களைப் பாது காக்கும் சட்டமான ‘போஸ்கோ’ போன்றவற்றிற்கும் முரணாகும்.

தண்டனைக்குரிய குற்றமாகும்

எப்படியெனில், இச்சட்டம் (போஸ்கோ) 18 வயதுக்குக் குறைவான (ஆண் - பெண் இருபாலரும்) ‘‘குழந்தை களாகவே’’ கருதப்படுகின்றனர் என்று தெளிவாகக் கூறு கிறது. இதன்படி, 18 வயதுக்குக் குறைவாக உள்ளவர் களிடம் உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்ற மாகும்.

உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பு, இந்த சட்ட முரண்பாட்டைக் களைந்து நீக்க உதவி புரிவதாகும்.

இருபால் குழந்தைகளை குறிப்பாக பெண் குழந்தை களை 8 வயதுக்கு முன்னரே - அவர்கள் பூப்படையும் முன்பே திருமணம் செய்துகொடுத்துவிட வேண்டும் என்பது இந்து மதத்தின் நடைமுறை உபதேசங்களில் ஒன்று.

காலஞ்சென்ற காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திரரின் ‘தெய்வத்தின் குரல்’ உபன்யாசத் தொகுப்பில் இது திட்டவட்டமான கட்டளையாகவே கூறப்பட் டுள்ளது.

‘‘சட்ட விரோதம் என்பதைவிட, சாஸ்திர விரோதம் தான் மகாமகா பாவமானது; குற்றமானது’’  என்பது பார்ப்பன இனத்தின் மடாதிபதியான சங்கராச்சாரிகள் முதல் அரசியல் தலைவர்களாக இருந்த சத்தியமூர்த்தி கள்வரை பிரச்சாரம் செய்த கருத்தாகும்!

(‘சாரதா’ சட்டம் வந்தபோதும், தேவதாசி முறை - பொட்டுக்கட்டி இளம் பெண்களை கடவுளுக்கு ஒப் படைக்கும் முறை ஒழிப்பு மசோதா வந்தபோதும் சென்னை சட்டசபையில் ‘‘சத்திய மூர்த்திகள்’’ இப்படித் தான் பேசினார்கள்!)

‘‘ஊறுகாய் ஜாடியில்’’ ஊறிக் கொண்டுள்ளது

இப்போதுகூட தில்லையில் வாழும் தீட்சதர்களான பார்ப்பனர்கள் குழந்தை மணத்தைச் செய்வதில் இன்றும் கூட சளைக்கவே இல்லை. அண்மையில் சிதம்பரத்தில் ஒரு அரசு அதிகாரியை, அனைத்துக் கட்சியினரும் சந்தித்து, சட்ட விரோதத் திருமணங்களைக் கட்டாயமாக நடத்திய தீட்சதர்கள்மீது நடவடிக்கை வேண்டுமெனக் கொடுத்த மனு ‘‘ஊறுகாய் ஜாடியில்’’ ஊறிக் கொண் டுள்ளது.

தமிழக அரசின் நிலைப்பாடு சட்டத்தைக் காப்பாற்றுவதில் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

ஒரு குலத்துக்கொரு நீதி

இதுவே ஒரு கிராமத்தில், சூத்திர, பஞ்சம ஜாதியார் களிடம் சட்ட விரோதத் திருமணம் என்ற புகார் கொடுக் கப்பட்டால், அவர்கள்மீது உடனே நடவடிக்கை!

இன்னமும் ஒரு குலத்துக்கொரு நீதியான மனு நீதிதான் இந்நாட்டை ஆளுகிறது சுயராஜ்யம் என்ற பேரால் என்பதற்கு இதைவிட நல்ல எடுத்துக்காட்டு வேறு வேண்டுமா?

இரண்டாம் இடத்தில் இந்தியா!

இந்தியா இதில் - இந்த குழந்தை மணம் - குழந்தை களின் பாலுறவு உரிமைப் பறிப்பில் இரண்டாம் இடத்தில் தெற்காசியாவில் உள்ளதாம்!

(முதல் இடம் வங்கதேசம்; 2 ஆம் இடம் இந்தியா; மற்ற 3 ஆம், 4 ஆம் இடங்கள் முறையே நேபாளம், ஆப்கானிஸ்தான்- இந்நாடுகளில் ஆரியத்தின் ஆதிகால தாக்கம் ஒருவேளை காரணமாக இருக்கலாம்).

சட்டங்கள் வெறும் ‘ஏட்டுச் சுரைக்காய்’களாக இருந்தால் என்ன பயன் சமுதாயத்திற்கு?

சமூகநலப் பிரிவு காவல் குழு

எனவே, இதுபோன்ற தீர்ப்புகள் வரவேற்கப்பட வேண்டியவை என்றாலும், நடைமுறையில் இவை மீறப்பட்டு, பச்சிளம் பிராயத்தவர்கள் பாலியல் வன்கொடுமையிலிருந்து காப்பாற்றப்பட ‘‘சமூகநலப் பிரிவு காவல் குழு’’ ஒன்றை - சிலை திருட்டுத் தடுப்பு என்ற கடவுள் பாதுகாப்புப் பணியைச் செய்வதுபோல இதனைச் செய்ய மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

 

கி. வீரமணி
தலைவர்,     திராவிடர் கழகம்.


சென்னை
14.10.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner