எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடவுள் சக்தி பாரீர்!

கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

சிவகங்கை, அக்.14 சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி அருகே உள்ளது பொன்னடிபட்டி கிராமம். இங்குள்ள முக்கிய சாலையில் விநாயகர் கோவில் உள்ளது.   நேற்று முன்தினம் இரவு பூசாரி வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டுச் சென்று விட்டார்.

நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த யாரோ சிலர் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிக் கொண்டு தப்பினர்.

மறுநாள் காலை கோவில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் உலகம்பட்டி காவல்துறையினருக்கும், கோவில் நிர்வாகத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கோவில் அறங்காவலர் பழனிவேல் காவல் நிலை யத்தில் கொடுத்துள்ள புகாரில் உண்டியல் பணம் 20 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் அடிப் படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் சாலை விபத்தில் பலி

காளஹஸ்தி, அக்.14 ஆந்திர மாநிலம், காளஹஸ்தி அருகே லாரி - கார் மோதிக்கொண்ட விபத்தில் திருப்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர்.

நெல்லூரிலிருந்து திருப்பதி நோக்கி லாரி ஒன்று வெள்ளிக் கிழமை வந்து கொண்டிருந்தது. இந்த லாரி, சித்தூர் மாவட்டம், காளஹஸ்தி அருகே உள்ள லான்கோ தொழிற்சாலை பகுதியில் வந்தபோது, எதிரே திருப்பதியிலிருந்து காளஹஸ்தி நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில், லாரியும், காரும் கவிழ்ந்தன. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி, அதில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்படு வதாவது: திருப்பூரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (55), தனது மனைவி, மகள், மகன் ஆகியோருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுக்குச் சென்றுவிட்டு, காளஹஸ்தி கோயிலுக்குக் காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. லாரியின் பிரேக் பழுதானதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. லாரியின் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner