எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி,அக்.15பணமதிப் பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மக்களிடையேஏற்பட்ட கொந்தளிப்பை அடக்க,மோடி யால்சொல்லப்பட்டபல காரணங்களுள் ஒன்று, ரொக்க மில்லாத பணப்பரிமாற்றம், அதாவது டிஜிட்டல் பேமெண்ட் என்னும் மின்னணுப் பணப் பரிவர்த்தனை.

இந்த மின்னணுப் பணப் பரிவர்த்தனையை பிரபலமாக்க ஒரு சிறு நகரத்தையே மாதிரி நகரமாக அறிவித்தனர். ஆந்திரா, தெலங்கானா எல்லையில் உள்ள சின்னஞ்சிறு நகரம் தான் இப்ராகிம்பூர்.

இந்நகர இரண்டு கிராமங் கள் சேர்ந்ததுதான் இந்த இப் ராகிம்பூர். பணமதிப்பிழப்புநட வடிக்கை கண்காணிப்புக் குழுவின் தலைவராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நியமிக்கப்பட்டார். ஆகையால் இவரதுஆலோசனையின்பேரில் (தற்போது தெலங்கானாவில் இருக்கும்)சித்திப்பேட்டை வட் டத்தைச் சேர்ந்த இப்ராகிம்பூர் சிற்றூரை தத்தெடுத்தது மத் திய அரசு.  மத்திய அரசால் ரூ.500மற்றும் ரூ.1000 நோட் டுக்கள்செல்லாதுஎனஅறி விக்கப்பட்ட பிறகு இந்தச் சிற்றூரை ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையின் மாதிரி கிரா மம் என புகழ்ந்தது.

ஆனால் இந்தச் சிற்றூரில் தற்போது எங்கும் கிரெடிட், டெபிட் கார்டுகளை வாங்குவ தில்லை, மாறாக ஊருக்கு அருகில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுக்க எப்போதும் வரிசையில் மக்கள் நின்றுகொண்டிருக்கின்றனர். இது குறித்து ஆய்வு செய்ய ஊடகவியலாளர்கள் அங்கு சென்றனர். அப்போது அவர்கள் எல்லா இடங்களிலும் ரொக்கத் தையே வாங்குவதைக் கண்டனர்.

பொதுமக்களில் ஒருவர் கூறும்போது, அரசு ஊழலை ஒழிக்க அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து எங்கள் ஊரை ரொக்கமற்ற பணப் பரிமாற்ற மாதிரி ஊர் என்று அறிவித்ததை கண்டுமகிழ்ந்தோம்.  இதனை அடுத்து எங்கள் ஊர் முழு வதும் ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை மக்கள் துவங் கினர்.  ஆனால் அவர்களுக்கு இந்தகார்டு தேய்க்கும் இயந்தி ரத்துக்கு மாதம் ரூ.1400 வாடகை தர வேண்டும் என்பது அப்போது தெரியவில்லை. ஆனால், போகப் போக இந்தக் கட்டணம் அவர்களுக்கு பெரும் சுமையாகி விட்டது. இந்த ஆறு மாதத்திற்குள் சுமார் ரூபாய் பத்தாயிரத்திற்கும் மேலாக கட் டணம் செலுத்தியதால் இழப்பு அடைந்த வணிகர்கள் அந்த இயந்திரத்தை திருப்பிக் கொடுத்து விட்டனர் என்றார்.

இந்த ஊரில் எந்த ஒரு ஏடிஎம்மும் இல்லை என்பதால் பலரால் வங்கியில் இருந்து பணம் பெறுவது மிகவும் கடி னமாக உள்ளது.  ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனை மாதிரி ஊருக்கே இந்த நிலை என்றால், மற்ற இடங்களில் நிலைமை வேறுமாதிரி உள்ளது, இன்று மெட்ரோ நகரங்களில் பிரபல உணவகங்களைத் தவிர மற்ற அனைத்துமே தங்கள் வாங்கிய அட்டை தேய்க்கும் இயந்திரத்தை திருப்பிக் கொடுத்துவிட்டன. 2017-ஆம் காலாண்டில் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை 2014-ஆம் ஆண்டு உள்ளதைவிட 2 மடங்கு பெருகியுள்ளது, இது ஒரு பொதுவான மாற்றம் தான். பணமதிப்பிழப்பு நட வடிக்கைக்குப் பிறகு மின்னணு பணப்  பரிவர்த்தனை அதிகரித் தது, ஆனால் மிகவும் குறுகிய காலத்திற்குள் அனைவரும் ரொக்க பணப் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர்.  அரசின் உத்தர வினால் இறக்குமதி  செய்யப்பட்ட அட்டை தேய்க்கும் கருவிகள் 62 விழுக்காடு வணிகர்களால் திரும்பிக் கொடுக்கப்பட்டு விட் டதால் அட்டை தேய்க்கும் இயந்திரங்களில் முதலீடு செய்த இறக்குமதியாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner