எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், அக் 15 இந்தியாவின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை உலக வங்கிப் பாராட்டியது என்று பிரதமர் நரேந்திர மோடி சொன்னது உண்மையல்ல; பொய்யான தகவலை பா.ஜ.க.வின் இணைய தளப் பிரிவு பரப்பிய செய்தி இப்பொழுது அம் பலத்துக்கு வந்துள்ளது.

மோடி தன்னிச்சையாகக் கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் அனைத்துத் தரப்பு எதிர்ப்பையும் மீறி கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என்று உலக வங்கி தெரி வித்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் மற்றும் தெற்காசியப் பொருளாதாரம் குறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் 2015 ஆம் ஆண்டில் 8.6 சதவீதமாக இருந்த இந்தியப் பொருளாதாரம். 2017 இல் 7 சதவீதமாக சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்றது, ஜிஎஸ்டி வரி விதித்தது உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரம் 2018 இல் தொடர்ந்து சரிவைச் சந்திக்கும்.

ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குப் பிறகு தொழிற் சாலைகள் முடங்கி விட்டன. உற்பத்தியும் முற் றிலும் நின்றுவிட்டது. 2018- ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த நிலைமை சரியாகும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நிலைமை அதற்கு சாதகமானதாகவே இல்லை. இந்தியா பொரு ளாதாரத்தில் வளர்ச்சி பெறவேண்டுமானால் வறுமை ஒழிப்புப் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் இந்த பொருளாதார மந்த நிலை தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி விகிதத்தைப் பாதித்துள்ளது. இதன் விளைவாகப் பொருளாதார வளர்ச்சியில் தெற்காசியா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளைவிட இரண்டு இடங்கள் இந்தியா பின்தங்கி உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை 2016 இல் 7.1 சதவீதமாக இருந்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.7 சதவிகிதமாக குறைந்துள்ளது  ஜிஎஸ்டி, 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை உலக வங்கி பாராட்டியது; பொய் கூறிய மோடி

பண மதிப்பிழப்பிற்கு பிறகு 2017 ஆம் ஆண்டு நிதிநிலை கூட்டத்தொடரின் போது பேசிய மோடி,

‘‘எனது பண மதிப்பிழப்பு நடவடிக்கையை உலக வங்கி பாராட்டியுள்ளது. இதன்மூலம் இந்தியா மாபெரும் பொருளாதார சக்தியாக வளரும்‘’ என்று கூறினார்.

அதே நேரத்தில் ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி அறி முக நிகழ்வின் போது பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி இரண்டு நடவடிக்கைகளால் இந்தியாவை உலகமே வியந்துபார்க்கும் என்று கூறியிருந்தார்.

உலக வங்கி அன்று கூறியது என்ன?

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில், இந்திய அரசின் இந்த (பணமதிப்பிழப்பு)  நடவடிக்கை பொருளாதாரத்தை எந்த அளவில் மாற்றப்போகிறது என்பது வரும் ஆண்டுகளில் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டே தீர்மானிக்கப்படும் என்று கூறியது.

மேலும் குறைவான மக்கள் தொகைகொண்ட நாடுகளில் இதுபோன்ற நடவடிக்கை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறியிருந்தது. உலக வங்கியின் இந்த செய்தி ‘‘பிசினஸ் டைம்ஸ்’’ போன்ற பிரபல ஆங்கில ஊடகங்களில் வந்திருந்தது.  ஆனால், பாஜகவின் இணைய தளப் பிரிவு இந்தச் செய்தியை இந்தியில் உலக வங்கி பாராட்டியது போன்ற பொய்யான செய்தியாக வெளியிட்டு, அதையே மோடியும் மேடைகளில் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner