எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அலகாபாத் பல்கலை. மாணவர் சங்கத் தேர்தல்: ஏ.பி.வி.பி.யை வீழ்த்தி சமாஜ்வாடி மாணவரணி வெற்றி

லக்னோ, அக்.15உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 5 பதவிகளில், தலைவர், துணைத்தலைவர், இணைச் செயலாளர் உள்ளிட்ட 4 பதவிகளை சமாஜ்வாடி கட்சியின் மாணவர் அணி வென்றுள்ளது.

பொதுச்செயலாளர் பத வியை மட்டும் பா.ஜ.க மாண வர் அணியான ஏ.பி.வி.பி வென்றது. கடந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட 4 பதவிகளை ஏ.பி.வி.பி வென்ற நிலையில் இந்த ஆண்டு ஒரு பதவியை மட்டுமே வென்றுள் ளது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட முக்கிய பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்களில் ஏ.பி.வி.பி பின்னடைவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இந்நாள்...இந்நாள்...

உலக கைகழுவும் நாள்

உலகக் கிராமப்புற மகளிர் நாள்

1932 - டாக்டர் அப்துல் கலாம் பிறப்பு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner