எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ளதற்கு (51ஏ-எச்) விரோதமானது இது!

மீறி நடத்தினால் பொதுமக்கள் போராட்டம் வெடிக்கும்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிவியல் நோக்கு அறிக்கை

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படைக் கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ள அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்பதற்கு விரோதமாக - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஜோதிடத்தைப் பாடமாக வைப்பது கண் டிக்கத்தக்கது - இதனைக் கைவிடா விட்டால் பொதுமக்கள் போராட்டம் வெடிக் கும் என்று   திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

தண்ணார் தமிழ் வளர்த்த அண்ணாமலைப் பல் கலைக் கழகம் அதன் நிர்வாகச் சீர்கேட்டால், அரசு டைமையாக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கீழிறக்கம்!

பல வெறுக்கத்தக்க வெளியில் சொல்ல முடியாத வேதனையான நிகழ்வுகளால், ஒடுக்கப்பட்டோர், சுற்றி லும் உள்ள மாவட்ட கிராமத்து முதல் தலைமுறை பிள்ளைகள் படித்து முன்னேறக் காரணமான அப்பல் கலைக் கழகம் அண்ணாமலை அரசரின் கொடையால் முகிழ்த்தது; அவர்தம் தலைமகன் - இணைவேந்தராக அண்ணாமலை அரசருக்கு அடுத்து வந்தவரின் பொதுநல வளர்ச்சி நோக்கால் சிறப்பாக கிளைத்து வரலாறு படைத்தது. அவருடைய இறுதிக் காலத்தில், அங்கு பணியாற்றியவர்களின் ஒத்துழையாமையால் - வளர்ச்சி ஒருபுறமென்றாலும், கீழிறக்கத்திற்கும் செல்லும் பரிதாப - வருந்தத்தக்க நிலை ஏற்பட்டது.

இப்போது அது மீண்டும் துளிர்த்து, வளர்ந்தோங்கிட வேண்டும் என்பதே எம் போன்ற அதனால் பயன்பெற்ற பழைய மாணவர்களின் விருப்பமாகும்!

பல்கலைக் கழகத்தில் ஜோதிடப் பாடமா?

இந்நிலையில், தமிழ்நாடு அரசும், மத்திய பல்கலைக் கழக மானியக் குழுவும் அதன் வளர்ச்சியைத் தடை படுத்தாது, தக்க தணிக்கை முறையுடன் சிறப்பாக செய்து, பழைய பெயரும், புகழும் அதற்கு மீண்டும் திரும்பு வதோடு, அது வெகுமக்கள் பல்கலைக் கழகமாக தமிழுக்கும், தமிழ் உணர்வுக்கும், அறிவியலுக்கும் தொண்டாற்றும் ‘தொட்டனைத்தூறும் மணற்கேணி யாகவே’ வளரவேண்டும் என்பது நமது அவா!

இந்நிலையில், அப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்களுக்கு அல்லது கல்வி ஆய்வுக் குழு - ஆளுமைக் குழுவுக்கு நமது வேண்டுகோள் என்ன வென்றால், மூடத்தனத்தின் முடைநாற்றமான, முன் னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும், ஜோதிடக் கலையை ‘M.A. Astrology’’  என்று  துவக்கி வைத்து, மக்களின் அறியாமை நோயை - இப்பல்கலைக் கழகம் வளர்க்கலாமா?

வானவியல் என்பது விஞ்ஞானம் -

ஜோதிடம் என்பது அஞ்ஞானம்

Astronomy -  - வானவியல் என்பது அறிவியல் - விஞ்ஞானம் (Science)

Astrology - ஜோதிடம் என்பது போலி அறி வியல் Pseudo Science)

ஜோதிடத்தைப் பல்கலைக் கழகங்களில் பரப்பிட முந்தைய வாஜ்பேயி (பா.ஜ.க.) அரசில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி என்ற பார்ப்பனர் புகுத்தினார்.

சிலரே, அவரது ‘மானியத்’ தூண்டிலில் ஆசைப் பட்டு சிக்கினர். பலர் ஏற்கவில்லை!

இப்போது அந்த அறியாமையை - இந்த அறிவு - அறிவியல் பரப்பும் பல்கலைக் கழகத்தில் பரப் பலாமா?

அரசமைப்புச் சட்டத்துக்கு

விரோதம்

இந்திய அரசியல் சட்டத்தின் 51ஏ (எச்) பிரிவு,

‘‘ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை (Fundamental Duty) என்பது, அறிவியல் மனப்பான் மையை (Scientific Temper) வளர்ப்பது, ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கும் உணர்வைப் பெருக்குவதும் (Sprit of Enquiry), சீர்திருத்தம், மனிதநேயம் இவைகளை பரப்புவதும் என்பதாகும்‘’ என்று கூறியுள்ளதற்கு நேர் முரணானதல்லவா, பல்கலைக் கழகங்களில் ஜோதிடம் என்ற போலி விஞ்ஞானத்தைச் சொல்லிக் கொடுத்து பொருள் ஈட்டுவது?

ஜோதிடத்தால் ஏமாந்தோர் எத்தனை எத்தனைப் பேர்கள்!

‘‘நாய் விற்ற காசு குரைக்காது; கருவாடு விற்ற காசு நாறாது’’ என்ற கொள்கை சிற்சில வியாபாரிகளிடம் வேண்டுமானால் இருக்கலாம்; கல்விக் கூடத்தில், அதுவும் பல்கலைக் கழகங்களில் இருக்கலாமா? இந்த அறியாமையை விரட்டி அறிவு போதிக்கவேண்டிய இடத்தில் இப்படி ஒரு மனிதநேய முரணா? (எத்த னையோ பேர் ஜோதிடம் பார்த்து ஏமாந்தவர்கள் உண்டே!).

உலகப் பேரறிஞர்கள் -நோபல் பரிசு பெற்ற விஞ்ஞான விற்பன்னர்கள் பலரும் இது ஒரு அறிவுக்கு ஒவ்வாதது என்று கூறி, கையொப்பமிட்டே அறிவித்துள்ள நிலையில், ஒரு பல்கலைக் கழகம் இதைச் செய்யலாமா?

மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்!

மீறிச் செய்தால், மக்கள் கிளர்ச்சி இதற்கு எதிராக - வெடித்தே தீரும் என்பதை நாம் வேதனையுடன் நிர்வாகத்திற்குச் சுட்டிக்காட்டுகிறோம்.

விஞ்ஞானம் இடம்பெறவேண்டிய பல்கலைக் கழகத்தில் போலி விஞ்ஞானமா?

‘குவாக்‘ டாக்டர்களை மருத்துவக் கல்லூரியில் அனுமதிப்பார்களா? அதுபோலத்தான் இந்த ஜோதி டமும்.

 

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

 

சென்னை
16.10.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner