எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி அக்.16 தன்னுடைய கருத்துரிமைக்கு எதிராக இருக் கும் மத்திய அரசு மற்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை எதிர்த்துத் தனியாக நின்று, தொடர்ந்து போராடிவரும் டில்லி பல் கலைக் கழக மாணவி குர்மெகர் கவுருக்கு தற்போது பொதுமக் களின் ஆதரவு கிடைத்துள்ளது.

டில்லி பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ராம் ஜாஸ் கல்லூரியின் மாணவி குர்மெகர் கவுர்.  பஞ்சாபிய பெண்ணான இவரது தந்தை ஒரு ராணுவ அதிகாரி.  பிரச்சி னைக்குரிய காஷ்மீர் பகுதியில் பாக். தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் இவர் மரணம் அடைந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவரது தந்தையின் மரணம் பற்றி இணைய தளம் ஒன்றில் பதிவிட்ட குர்மெகர் தனது தந்தையின் படத்தை வெளியிட்டு, ‘‘எனது தந்தை யைக் கொன்றது பாகிஸ்தான் இல்லை. போர் தான் கொன்றது’’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை அடுத்து

ஆர்.எஸ்.எஸ்.மாணவர் அமைப் பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அவரை கடுமையாக கண்டித்தது. இதனால் குர்மெக ருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பின்னூட்டம் இட்டனர்.  அவர் பதிந்த அந்தப் படம் சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.  அவர் தேவை இல்லாமல் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக் கிறார் என பிரபல கிரிக்கெட் வீரரும், இந்தி நடிகர் ஒருவரும் அவரது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக பதிவுகள் இட்டனர்.

மத்திய உள்துறை இணைய மைச்சர் கிரன் ரிஜ்ஜு, ‘‘இந்தப் பெண்ணின் மனதை யார் இவ்வாறு கெடுத்தது’’ என சமூக வலைதளத்தில் பெண் ணின் படத்தோடு பதிவிட்டு மிரட்டும் தொனியில் பல பதில் பின்னூட்டங்களுடன் வெளியிட்டார்.

இந்த நிலையில் குர்மெகர் கவுருக்கு எதிராக பல இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல்கள், ஆபாச வார்த்தைகளால் அவரை மிரட்டி மின்னஞ்சல் அனுப்பு வது, கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவது, சமூக வலைதளத்தில் பதிவிடுவது போன்ற வகைகளில் அவரைத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தனர்.

சமீபத்தில் இந்து அமைப் பைச் சேர்ந்த தலைவர் ஒருவர் பொதுக்கூட்டம் ஒன்றில், அப் பெண்ணின் பெயரை நேரடி யாகக் குறிப்பிட்டு, ‘‘அவர் தேசத் துரோகி’’ என்று பேசி னார். இதனால் அப்பெண்ணின் நண்பர்களும், உறவினர்களும் இந்த மிரட்டல் காரணமாக அமைதியாக போகுமாறு அப் பெண்ணிடம் வற்புறுத்தினர்.

ஆனால், குர்மெகர் கவுர் மீண்டும் ஒரு பதிவை தன் புகைப்படத்துடன் பதிந்தார். அதில் நான் டில்லி பல்கலைக் கழக மாணவி.  ‘‘நான் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தைக் கண்டு பயப்படவில்லை.  நான் தனி மனிதர் அல்ல.  மாணவர் சமுதாயமே என் பின்னால் உள்ளது’’ எனப் பதிந்துள்ளார்.

இது குறித்து கேட்கையில், குர்மெகர், ‘‘நான் ஏன் அமைதி யாக இருக்க வேண்டும்?  ஒரு சாதாரணப் பெண்ணாக என் கருத்தை நான்  சொன்னேன்.  ஆனால், நான் கேளாமலேயே என்னை முன்னுக்குத் தள்ளி உள்ளனர். நான் புகழ் பெறு வதற்காக எனது கருத்தைச் சொல்லவில்லை.  இருப்பினும் தற்போது எனது பேச்சையும், கருத்தையும் கேட்கப் பலர் முன் வந்துள்ளனர்.  நல்ல கருத்தை சொல்ல யாரிடமும் பயப்படத் தேவை இல்லை.  நான் நல்லது சொல்கிறேன் என்றால் அதை நான் ஏன் சொல்லக்கூடாது?’’ என பதிலுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner