எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இருவரின் படங்களோடு வட மாநிலங்களில் சுவரொட்டிகள்

பி.ஜே.பி. ஆளும் மாநிலத்திலேயே கடும் எதிர்ப்பு அலைகள்

லக்னோ, அக்.16 பணமதிப்பிழப்பு, அதைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி. என்று பல சர்வாதிகார நட வடிக்கைகளால் இந்தியாவின் வணிகம் கடுமையாகப் பாதிக் கப்பட்டு சிறு குறு வணிகர்கள் மிகவும் பரிதாப நிலைக்குச் சென்றுவிட்டனர். நாடு முழு வதும் மோடிக்கு எதிராக வணி கர்கள் கிளர்ந்தெழத் துவங்கி யுள்ளனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேசம், டில்லி உள் ளிட்ட வடமாநிலங்களில் மோடியை வடகொரிய சர்வாதி கார அதிபர் கிம் ஜோன் உன் னுக்கு இணையானவர் என ஒப்பிட்டு வணிகர்கள் சுவ ரொட்டி ஒட்டியுள்ளனர்.

வணிகர்களின் அவதி

மோடி தன்னிச்சையாக 2016- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி பண மதிப்பிழப்பு அறிக்கையை வெளியிட்டார். இதனால் நாடு முழுவதும் பொருளாதார அவசர நிலை உருவானது. இந்தப் பாதிப்பு குறையும் முன்னரே விளைவு களை கணக்கில் கொள்ளாமல் ஜி.எஸ்.டி-. என்னும் ஒரே வரி விதிப்பை அறிமுகப்படுத்தி னார். இதனால் பொருள்களின் விலைகள் 20 மடங்கு அதிக மானது. ஏற்கெனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் உற்பத்தி குறைந்து வணிகம் படுபாதாளத்தில் சென்றுவிட்ட நிலையில், ஜி.எஸ்.டி. அறி முகப்படுத்தியதால் கையிருப் பில் உள்ள பணத்தைக் கொண்டு வியாபாரம் நடத்த இயலாத நிலைக்கு வணிகர்கள் தள்ளப் பட்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் வணிகர்களிடம் பணப் புழக்கம் அறவே நின்றுவிட்டது. இத னால் தாங்கள் சேகரித்து வைத்த சில்லறைகளைக் கொண்டு பொருள்கள் வாங்கவும், வங் கியில் கொடுத்து ரூபாயாக மாற்றவும் முயல்கின்றனர். இந்த நிலையில் சில்லறைகளை மொத்த நிறுவனங்கள் வங்கிகள் வாங்க மறுக்கின்றன. தொழிலா ளர்களும், பொதுமக்களும் சில் லறைகளை வாங்குவதை மறுத்த நிலையில் வணிகர்கள் கையறு நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளனர். இந்த நிலைக்குத் தள்ளிய மோடியை கடுமையாகக் கண்டிக்கும் விதமாக லக்னோ, கான்பூர் உள்ளிட்ட இதர உ.பி. டில்லி வணிகர்கள் மோடியை சர்வாதிகார வடகொரிய அதிபர் கின் ஜோன் உன்-னுக்கு நிகரான வர் என்று ஒப்பிட்டு சுவரொட் டிகளை ஒட்டியுள்ளனர்.

கைது படலம்

இந்த சுவரொட்டியின் ஒரு புறத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜோன் உன் படமும், மற்றொரு புறத்தில் மோடியின் படமும் இடம்பெற்றுள்ளன. உலகத்தை அழித்தே தீருவேன் என கிம் சொல்வது போன்ற வாசகம் ஒருபக்கமும், இந்திய வணிகர்களை அழிக்காமல் விட மாட்டேன் என்று பிரதமர் மோடி கூறுவது போலவும் வாசகங்கள் இந்தி மொழியில் இடம் பெற்றுள்ளன. மேலும் மன்கி பாத் பேசும் மோடியே! வணிகர்களின் மனத்தில் உங்கள் நடவடிக்கையால் ஏற்பட்ட காயம் உங்களுக்குப் புரியவில் லையா? என்றும் எழுதியுள் ளனர்.  இப்படங்களைக் கண் டதும் கான்பூர் ,லக்னோ நகர பாஜகவினர் காவல்துறையின ரிடம் புகார் அளித்தனர். இதன டிப்படையில் இரண்டு நகரங் களிலும் 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 22 வர்த்த கர்கள் மீது காவல்துறையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரவீன் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner