எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருவண்ணாமலைமாவட் டம், திருவத்திபுரம் நகராட்சி, கொடைநகர் பகுதியில் நக ராட்சி தொடக்கப்பள்ளிசெயல் பட்டுவருகிறது. இந்தப் பள்ளிக் கூடத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன் (அ.தி.மு.க.) திடீர் ஆய்வினை நடத்தியுள்ளார். (‘தினத்தந்தி’, 14.10.2017).

ஆய்வு நடத்தியதோடு நிற்கவில்லை. ஆசிரியர் ‘திலக மாகவே’ மாறி பாடம் நடத்தவும் ஆரம்பித்து விட்டார். அதுவும் எப்படிப்பட்டது?

வாயால் மட்டுமல்ல, கரும் பலகையிலும் எழுத ஆரம்பித்துவிட்டார். கணி தமா? அறிவியலா? தமிழ் இலக் கணமா? இல்லை... இல்லை...

இராகு காலம், எமகண்டம் நேரங்களைக் கிழமை வாரி யாக நினைவில் வைத்துக் கொள்வது எப்படி என்பதைக் கரும் பலகையில் எழுதினாரே பார்க்கலாம்.

இந்த வெட்கக்கேட்டை என்னவென்று சொல்லுவது! அண்ணாவின்பெயர்வேறு! அண்ணா இதைத்தான் சொல் லிக் கொடுத்தாரா?

இதையெல்லாம் பார்க்கும் பொழுது முகநூலில் வெளிவந்த ஒரு தகவல்தான் நினைவிற்கு வந்து தொலைகிறது.

கடவுள், மதம், ஜாதி, ஜாதகம், ஜோதிடம் என்ற பெயரால் எவ்வளவுக் காலத் தைப் பாழ்படுத்துகிறோம் என் பதுதான் அந்தத் தகவல்.

இராகு காலம் ஒரு மாதத் திற்கு 1.30ஜ்30 = 45 மணி நேரம்

ஒரு ஆண்டிற்கு 540 மணி நேரம்.

எமகண்டம் ஒரு மாதத்திற்கு 1.30ஜ்30 = 45 மணி நேரம்

ஒரு ஆண்டிற்கு 540 மணி நேரம்.

அஷ்டமி (மாதத்திற்கு 2 நாள் கள்)

ஒரு ஆண்டிற்கு 48ஜ்12 = 576 மணி நேரம்

நவமி (மாதத்திற்கு 2 நாள் கள்)

ஒரு ஆண்டிற்கு 48ஜ்12 = 576 மணி நேரம்

மரண யோகம் ஒரு மாதத் திற்கு 1.30ஜ்30 = 45 மணி நேரம்

ஒரு ஆண்டிற்கு 540 மணி நேரம்.

கரி நாள் (மாதத்தில் 3 நாள் கள்)

ஒரு ஆண்டிற்கு 540 மணி நேரம்.

பிரதமை (பாட்டிமை மாதத் திற்கு 2 நாள்கள்)

ஒரு ஆண்டிற்கு 48ஜ்12 = 576 மணி நேரம்

சூரிய கிரகணம் ஒரு ஆண் டிற்கு ஒரு நாள் 24 மணி நேரம்.

சந்திர கிரகணம் ஒரு ஆண் டிற்கு ஒரு நாள் 24 மணி நேரம்.

மதம் சார்ந்த பண்டிகைகள் ஆண்டிற்கு 33 நாள்கள் ஒரு ஆண்டிற்கு 33ஜ்24 = 792 மணி நேரம்

ஆக மொத்தம் = 4728 மணிநேரங்கள்

4728  24 = 197 நாள்கள்

ஆக ஆண்டிற்கு 365 நாள்களில் 197 நாள்கள் மூட நம்பிக்கை என்ற பெயரால் விலை மதிக்க முடியாத நம் நேரம் வீணடிக்கப்படுகிறதே! காலம் கண் போன்றது என்பது இதுதானா?

பகுத்தறிவைப் பயன்படுத் தாததால் மனிதன் அறிவையும், காலத்தையும், பொருளையும் எப்படியெல்லாம் இழக்கிறான் பார்த்தீர்களா?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner