எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மைசூரு, அக்.17  முதலமைச்சர் சித்தராமையா நேற்று முன் தினம் மைசூருவுக்கு வருகை தந்தார். பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் மைசூருவுக்கு வருகை தந்த அவர் மண்டஹள்ளி விமான நிலையத்தில் செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித் தார்.

அப்போது அவர் கூறி யதாவது:

மாநில அரசின் கருவூலம் காலியாக உள்ளதாகவும், நான் விதான் சவுதாவை அடகு வைத்து இருக்கிறேன் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.எடியூரப்பா கருநாடக முதல மைச்சராக இருந்து மும்முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள் ளார். ஆனால் அவருக்கு பொரு ளாதாரத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாது.

பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்தபோதுவளர்ச்சிப் பணி களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கொள்ளையடித்ததே அவர்களின் சாதனையாகும். பாரதீய ஜனதாவினர் மாநில அரசுக்கு எதிராக நடத்தும் போராட்டங்கள், பேரணிகளால் மக்கள் மனம் மாற மாட்டார் கள். அவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. விதான் சவுதாவை நான் அடகு வைத்ததாக எடியூரப்பா கூறியுள்ளது அறிவு இல்லாத வர்கள் பேசும் பேச்சு. மக்களுக்கு சொந்தமான விதான் சவுதாவை அடகு வைக்க முடியுமா?

கேரள மாநில அரசு பார்ப் பனர்கள் அல்லாத தலித்துகளை கோவில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்துள்ளது.

அதேபோல கருநாடக மாநிலத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான கோவில்களிலும் தலித்துக்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்வதில் எனக்கு எந்தத் தடையும் இல்லை. கேரளாவை போன்று கருநாட கத்திலும் அரசுக்குச் சொந்தமான கோவில்களில் தலித்துகள் அர்ச் சகர்களாக விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு முதலமைச்சர் சித்தராமையா கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner