எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மரங்கொத்தி மரணித்ததே!

முக்கிய மெட்ரோ நகரங் களில் தீபாவளி அன்று வெடிக் கப்படும் பட்டாசுகளின் மொத்த அளவை கணக்கிட்டால், ஒரு பெரிய வெடிகுண்டு தனித் தனியாக வெடிக்கப்பட்டது போலத்தான் இருக்கும்.

பட்டாசு வெடிப்பதால் ஏற் படும் முதல் பாதிப்பு, அதிலி ருந்து வரும் பெரும் அதிர்வு ஒலி(ழிஷீவீsமீறிஷீறீறீutவீஷீஸீ).இதுநம் காதுகளுக்குப்பாதிப்பைஏற் படுத்தலாம். உயிரினங்களின் நடத்தை முறையிலும் (ஙிமீலீணீஸ்வீஷீuக்ஷீ) பாதிப்பை ஏற்படுத் தும்.
பட்டாசுஒலியால்வீட்டு வளர்ப்புப் பிராணிகள், பறவை கள், வண்ணத்துப்பூச்சிகள், சிறு பூச்சியினங்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. அவற்றின் ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.

உலக சுகாதார நிறுவனம், வகுத்துள்ள வரையறையின்படி இரவில்35டெசிபலுக்குமேலே சத்தம் ஏற்பட்டால், மனிதர்களி டையே தூக்கக் கோளாறு ஏற்படலாம்.பகலில்55டெசி பலுக்கு மேல் ஒலி இருக்கக் கூடாதுஎன்றுவரையறுத்திருக் கிறது. ஆனால், பட்டாசு வெடிக் கும்போது 140 டெசிபலுக்கு மேல் ஒலி மாசு ஏற்படுகிறது. பட்டாசுவெடிக்கும்போதுஅதில் பயன்படுத்தப்பட்ட பேரியம் (பச்சை நிறத்துக்கு), சோடியம் (மஞ்சள்நிறத்துக்கு),தாமிரம் (நீல நிறத்துக்கு), ஸ்டிராண்டியம் (சிவப்பு நிறத்துக்கு), அலுமினி யம், காரீயம், பாதரசம், ஆண்டி மணி, டெக்ஸ்டிரின், மாங் கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் குளோரைடு, டைட்டானியம், சல்பர் டை ஆக்சைடு, நைட் ரிக் ஆக்சைடு உள்ளிட்ட நச்சுவேதிப்பொருட்கள்வெளிப் படுகின்றன.பட்டாசு,மத்தாப்பு களில் இருக்கும் வெடிமருந்து களும் வெடிக்கப்பட்டு 80 நாட்களுக்கு மண்ணில் வீரியம் குறையாமல் காணப்படும்.

சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடம் மற்றும் திடலின் பல பகுதிகளில் உள்ள மரங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்த மரங்கொத்திப் பறவைகளுக்கு உண்டு. இதன் வித்தியாசமான ஓசை நண்பகல் நேரங்களில் அய்யாவின் நினைவிடப்பகுதிகளை ரம்மியமாக்கும்.தீபாவளிஎன்ற முட்டாள் தனமான ஒரு பண் டிகையால் இந்தப் பறவைகளில் ஒன்று உயிரிழந்துள்ளது.

அருகில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தீபாவளி இரவன்று தொடர்ந்து பட்டாசு களை வெடித்த காரணத்தால் புகைமூட்டம்அதிகமாகி,சுவா சிக்க வழியின்றி மயங்கி விழுந்து மரணமடைந்து விட் டது.  மனிதர்களின்  பட்டாசு வெடிக்கும் அற்ப ஆசைக்கு பலியானதுமரங்கொத்திப் பறவை.

இந்த மரங்கொத்தி மரங்களில் உள்ள பூச்சிக்களை/ புழுக்களை சாப்பிடும். மழைக்காலங்களில் மரங்களில் மீது பாசி படிகிறது; இதில் பூஞ்சைகள் வளர்ந்து விடுகின்றன. இந்த மரங்கொத்தி, பூச்சி,புழுக்களைத்தின்றுமரத் தைப்பாதுகாக்கிறது,பாசி யைப் பிய்த்துக் கூடு கட்ட வும்,உணவுக்காகவும்பயன் படுத்துகிறது.இதன்மூலம் மரத்தின் ஆயுள் காக்கப்படு கிறது.

அதுமட்டுமல்ல; மழைக் காலத்தின் துவக்கப் பருவத்தில் இது முட்டையிட்டு அதில் குஞ்சுகள் பிறக்கும் தருணத்தில் நாம் ஒரு மரங்கொத்தியை மட்டும் கொல்லவில்லை, பல மரங்களை கொலை செய்ய வழிவகை செய்துவிட்டோம். இதுதான் தீபாவளியின் பரிசோ!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner