எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, அக்.19 பட்டாசு புகையால் சென்னையில் காற்றுமாசு பெருமளவு அதி கரித்துள்ளதுஎனமாசுக்கட் டுப்பாட்டு வாரியம் தெரிவித் துள்ளது.

அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கன மீட்டருக்கு 100 மைக்ரான் என்பதே அனுமதிக்கப்பட்ட காற்று மாசு அளவாகும். ஆனால், நேற்று பட்டாசு வெடித்ததன் காரணமாக 2.5 மைக்ரானில் 263 நுண்துகள்கள் உள்ளன. மேலும் சென்னையில் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் 3 இடங்களில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் மாலை 4 மணி நேர நிலவரப்படி காற்று மாசு அளவு 263 ஆக இருப்பதாக தெரிவித்துள்ளது. காற்றின் நுண்துகள்கள் அதி கம் கலந்திருப்பதால் மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும் எனவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறி வுறுத்தியுள்ளது.முன்னதாகபண் டிகையையொட்டிபட்டாசு வெடித்த தால் சென்னையில் கடும்புகை மூட்டம் ஏற்பட்டுள் ளது. மயிலாப்பூர், கிண்டி, திரு வல்லிக்கேணி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் தாம்பரம், குரோம் பேட்டை ஆகிய இடங்களி லும் பட்டாசு வெடித்ததால் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. புகைமூட்டம்ஏற்பட்டதால்  வாகனஓட்டிகள் பாதிப்புக்கு உள்ளாயினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner