எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அயோத்தி, அக்.20 உலக அதி சயங்களில்ஒன்றுதாஜ்மகால். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராநகரில்யமுனைநதிக் கரையில் இது அமைந்துள்ளது. தாஜ் மகாலை பாரதீய ஜனதா தலைவர்கள் அடுத்தடுத்து விமர்சித்து வருகிறார்கள். முதலில் அது உத்தரப்பிரதேச மாநில சுற்றுலா கையேட்டில் இருந்து மாநில பா.ஜனதா அரசு நீக்கியது.

அதையடுத்து பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. வான சங்கீத் சாம் கூறும்போது, தாஜ்மகாலுக்கு இந்திய வர லாற்றில் இடம் அளிக்க கூடாது. அது துரோகிகளால் கட்டப்பட்டது. அது இந்திய வரலாற்றின் களங்கம் என்று தெரிவித்து இருந்தார்.

இது சர்ச்சையை ஏற் படுத்தி இருந்தது. இதற்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்பதில் அளிக்கும்போது, தாஜ் மகாலை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அர சுக்கு உண்டு. அது இந்தி யர்களின் ரத்தத்தாலும், வியர் வையாலும் கட்டப்பட்டது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் தாஜ்மகால் ஒரு இந்து கோவில் என்று பாரதீய ஜனதா எம்.பி. வினய்கட்டியார் கருத்து தெரிவித்து உள்ளார். இது மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதுகுறித்து எம்.பி. வினய் கட்டியார் கூறியதாவது:-

தாஜ்மகால் ஒரு இந்து கோவிலாக இருந்தது. அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன. தேஜோ மகால் என்று முன்பு அழைக்கப்பட்டு இருந்தது. கோபுரத்தில் இருந்து சிவலிங் கத்தின் மீது தண்ணீர் சொட்டு சொட்டாக விழும் வகையில் கட்டப்பட்டு இருந்தது. இதை அவர்கள் அகற்றி விட்டனர்.

முகலாய மன்னர்கள் பல கோவில்களை இடித்து விட்டனர். எங்கெல்லாம் வாய்ப்புகிடைத்ததோஅங் கெல்லாம் நமது கோவில்களை அகற்றி விட்டனர்.

எங்களது தேஜோ மகால் கோவில் பராமரிக்கப்பட வேண்டும். தாஜ்மகாலின் வர லாற்றை ஆய்வு செய்தால் அது கோவிலாக இருப்பதற்கான சான்று கிடைக்கும். தாஜ் மகால் பெயரை தேஜோ மகால் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு வினய் கட் டியார் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner