எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திருவனந்தபுரம், அக். 20 ஆர்எஸ்எஸ், பாஜகவிடம் இருந்து கேரள மக்கள் கற்றுக் கொள்ள எதுவும் இல்லை என்று, பாஜக தேசியத் தலை வர் அமித் ஷா-வுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

தனது இதயம் மதச்சார்பின்மைக் கொள்கைகளால்கட்டப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தில் இடது சாரிகளால், ஆர்எஸ்எஸ், -பாஜகவினர் தொடர்ந்து கொல் லப்படுவதாக கூறி, பாஜக-வினர் ஜன் ரக்ஷா யாத்திரையை நடத்தினர்.

இந்தயாத்திரையைபாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவே, கடந்த 3- ஆம் தேதியன்று கண்ணூருக்குநேரில்வந்து தொடங்கி வைத்தார். அடாவடிக் குப் பெயர் போன சாமியாரும், உத்தரப்பிரதேச முதல்வருமான ஆதித்யநாத்தும் கேரளா வந்து சென்றார்.

பா.ஜ.க. நடத்திய யாத்தி ரைக்கு மக்கள் ஆதரவு இல்லை எனினும், இந்த யாத்திரையின் நிறைவு விழா என்ற பெயரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடத்தப் பட்ட கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.

அப்போது, கேரளத்தில் ஆளும் இடது ஜனநாயக முன் னணி அரசையும், முதல்வர் பினராயிவிஜயனையும்கடு மையாகவிமர்சித்தார்.வன் முறை செயல்களில் ஈடுபட்டு வருவதால் மக்கள் இடது சாரிகளை கேரளாவில் இருந்து தூக்கியெறியும் நிலை வெகு தூரத்தில் இல்லை என்றும், இடதுசாரிகள் பாஜகவுடன் மோத விரும்பினால், வளர்ச்சி மற்றும் சித்தாந்த ரீதியில் முடிந் தால் மோதுங்கள் என்றும் கூறினார்.

இந்நிலையில், அமித்ஷா வின் பேச்சுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், பதிலடி கொடுத்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ், பாஜக-வி டம் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். பாஜக ஆட்சி செய்யும் எந்த மாநிலமும் வளர்ச்சி குறியீட்டில் கேரளா பெற்றுள்ள சர்வதேச தரத்தை எட்டவில்லை; கேரளத்தோடு ஒப்பிடும் அளவுக்கு கூட எந்த மாநிலமும் இல்லை; கொலை அரசியல் மற்றும் தோல்வியடைந்த யாத்திரை மேற்கொண்ட பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஸிடமிருந்து கேரளா, கற்றுக்கொள்ள எது வும் இல்லை; மதச்சார்பற்ற கொள்கைகளால் எனது இதயம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பாஜக வெறுப்பு மற்றும் மத சித்தாந்தங்களை மட்டுமே கொண்டுள்ளது என்று பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner