எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, அக்.23 குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கிவருகின்ற நிலையில், தாழ்த்தப்பட்டவர்களின் உரி மைகளுக்காக செயல்பட்டுவருபவரான ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டவர்கள் குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்துப் பேசி வருகிறார்கள்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்¤ல் குஜராத் மாநிலத்தின் உனா பகுதியில் செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் என்று தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்பட்டார்கள். அத்தாக்குதல் நிகழ் வைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பெரிய அளவில் கிளர்ச்சி வெடித்தது.

மக்களிடையே பாஜகவுக்கு

எதிராகப் பரப்புரை

மும்முனைப்போட்டி என்கிற பெயரால் வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்று மக்களிடையே பாஜகவுக்கு எதி ராகப் பரப்புரை செய்துவருகின்றனர்.

மேவானி மற்றும் அவருடைய தோழர்கள் எவரும் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இணையவில்லை. இது குறித்து அவர் கூறியதாவது:

‘‘2016ஆம் ஆண்டு ஜூலையில் நடை பெற்ற உனா நிகழ்வினைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட கட்டமைப்பை அர சியல் கட்சிகளோடு இணைத்தால் சீர்குலைந்துபோகும். ஆகவே, எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல், செயல்பட்டுவருகிறோம். அதேநேரத்தில் மக்களிடம் சென்று பாஜகவுக்கு எதிராக தீவிரமாக பரப்புரை செய்துவருகிறோம்.  பாஜகவை பழிவாங்கும் வண்ணம் பாஜ கவுக்கு எதிராகவே மக்கள் வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.

மேவானி கூறும்போது,

“தாழ்த்தப்பட்ட வகுப்புத் தலை வர்கள் பிற முற்போக்கான சக்திகளுடன் இணைந்து பாஜகவுக்கு எதிராக பரப் புரை செய்ய வேண்டும். 500 பேர் முதல் 1500 பேர் கூடுகின்ற கூட்டங்களில்  மக்களிடையே நாள்தோறும் பேசி வருகிறோம். தாழ்த்தப்பட்டவர்கள், ஏழை எளியவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள்உள்ளிட்டஅனைத்து தரப்பினருக்கும் எதிராக, அரசமைப் புச்சட்டத்திற்குஎதிராகஉள்ளகட்சி யாக பாஜக உள்ளது. அனைத்து பிரச்சினைகள்குறித்தும்நாம் குரல் எழுப்பினாலும், அப்பிரச்சினைகள் குறித்து அக்கட்சி விவாதிக்கவோ, பேசவோ மறுத்து வருகின்றது.

மக்களிடையே பரப்புரையின்போது, நேரடியாக காங்கிரசு கட்சிக்கு வாக் களிக்குமாறு கோராமல், சாதாரண வாக்காளருக்கும் சென்று சேர வேண்டிய செய்திகளை தெளிவாகக் கொண்டு செல்கிறோம். நாங்கள் மூன்றாவது அணியை முன்னெடுப்பதாக இல்லை. ஒன்றைரை மாத இடைவெளியில் மூன் றாவது அணிகுறித்து சிந்திப்பதற்கு நேரம் கிடையாது.

வாக்காளர்கள் மத்தியில் பாஜகவுக்கு எதிராக தீவிரமான பரப்புரைகளை செய் வது மட்டுமே எங்கள் நோக்கமாக இருக்கிறது.சட்டப்படியானஎங்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யத் தயாராக இல்லை. தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிராக, முரண்பாடான நிகழ்வுகள் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பாஜகவிலிருந்து எவர் ஒருவரும் தாழ்த்தப்பட்டவர்களை மீட்க முயற்சிக்கவில்லை’’ என்றார்.

ஒரே இலக்கை

முன்வைத்து

ஹர்திக் படேல் கூறுகையில்,

Òகாங்கிரசு கட்சிமீது முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்காவிட்டாலும், ஆளும் கட்சியான பாஜகவை முறி யடிக்க காங்கிரசை விட்டால் வேறு வழியில்லை. ஆகவே, பாஜகவை முறியடிக்க வேண்டும் என்ற ஒரே இலக்கை முன்வைத்து நாங்கள் ஒன்றி ணைகிறோம்’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner