எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குஜராத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பி.ஜே.பி.யின் தில்லுமுல்லுகள்!

பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் மகனின் ஊழல் ஒன்றுபோதாதா பி.ஜே.பி.யின் ஊழல்களுக்கு?

ஒப்பனைகள் நீடிக்காது - முகமூடிகள் கழன்று வீழ்கின்றன உண்மை வெளிச்சத்துக்கு வந்துகொண்டுதான் உள்ளது

பா.ஜ.க.வின் முகமூடியைக் கிழிக்கும் கழகத் தலைவரின் அறிக்கை

வேளாண் துறையையும் மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு போவதா?  மாநில அரசுகள் கண்டிக்கவேண்டும்

ஊழலற்ற ஆட்சி நடத்துவதாகத் தம்பட்டம் அடிக்கும் பி.ஜே.பி.யின் ஆட்சி யில் ஊழல்களுக்குப் பஞ்சமில்லை; குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க பணம் கொடுத்து ஆள் பிடிக்கும் பி.ஜே.பி.யின் செயல்பாடுகள் ஆதாரத்தோடு வெளிச் சத்துக்கு வந்துவிட்டன. ஒப்பனைகள் நிரந்தரமல்ல; முகமூடிகள் கழன்று வீழ்கின்றன - உண்மைகளும் வெளிச் சத்துக்கு வரத் தொடங்கிவிட்டன என்று   திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

குஜராத்தில் கடந்த பல ஆண்டுகளாக தமது இஷ்டம் போல் நடைபெற்ற பா.ஜ.க.வின் ஆட்சியை, வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தக்க வைக்க, மோடியும், அவரது கட்சித் தலைவரான அமித்ஷாவும் தங்களது சாம, தான, பேத, தண்ட முறைகளைக் கையாளத் தயாராகி விட்டனர் என்பது அவர்களது அன்றாட ஆட்சி செயல்கள்மூலம் நாட்டோருக்குத் தெளிவாகி வருகின்றன.

பி.ஜே.பி.க்கு ஆதரவாக தேர்தல் ஆணையம்

இமாச்சலப் பிரதேசத்தின் தேர்தல் தேதி அறிவிப்பினையொட்டியே, குஜராத் தேர்தல் தேதியும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், இமாச்சலப் பிரதேசத் திற்கு (அங்கு காங்கிரசு ஆளுகிறது) முதலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது, தேர்தல் ஆணையத்தின் நடு நிலை தவறிய ஒரு செயல் என்று எதிர்க்கட்சிகள் சரியான குற்றச்சாற்றினை வைக்கின்றன.

இதற்கு தேர்தல் ஆணையம் சொன்ன விளக்கம் வேடிக்கையானது, விசித்திரமானது! ‘‘வெள்ள நிவாரணப் பணிகளாக’’ நடைபெறுகின்றன; பிரதமர் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டங்கள் என்ற ‘கேரட்’டை வாக்காளர்கள் முன்வைக்கப் போதிய அவகாசம் தேவை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது ஒரு தலைப்பட்ச முடிவு என்பது வெளிப்படையாகி விட்டது.

குற்றம் சொல்லும் தகுதி எதிர்க்கட்சிகளுக்கு இல்லையாம் - பிரதமர் மோடி சொல்கிறார்!

பின் யாருக்குத்தான் ஜனநாயகத்தில் உண்டு என்பதை அவர்தான் தெளிவுபடுத்தவேண்டும்!

பணம் கொடுத்து  ஆளை வளைக்கும் கேவலம்!

குஜராத்தில் பா.ஜ.க.வின் ‘வாக்கு வங்கியாக' இது வரை  திகழ்ந்து வந்த பட்டேல்களும், பிற்படுத்தப்பட் டோரும், தாழ்த்தப்பட்டோரும் வெளிப்படையாகவே, மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அங்கே 2018 இல் அமைய விடக்கூடாது என்பதில் உறுதியோடு உள்ளனர் என்ப தால், அவர்களை எப்படியாவது - எந்த விலை கொடுத் தாகிலும் தம் அணிக்கோ, கட்சிக்கோ இழுக்கவேண்டும் என்று சகலவித உபாயங்களையும் கையாளுகின்றனர்.

ஹர்திக் பட்டேல் என்ற 24 வயது இளைஞர், பட்டேல் களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற போராட்டத்தை நடத்தி  அங்கு ஏற்கெனவே கனன்று கொண்டிருந்த சமூகநீதித் தீயைப் பெருக்கி விட்டார். அவரது நண்பர் நரேந்திர பட்டேல் என்பவரை பா.ஜ.க.வில் சேரும்படி அவரிடம் ஒரு கோடி ரூபாய் பேரம் பேசி, முன்பணம் 10லட்சம் ரூபாய் தரப்பட்டதை, செய்தியாளர்களிடம் வெளிப்படையாகக் கூறி, பணத்தைக் காட்டியுள்ள செய்தி எல்லா ஏடுகளிலும் வெளிவந்துள்ளது!

பா.ஜ.க. ஏதோ ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சிபோல ஒரு பிம்பத்தை - பிரச்சாரத்தினை காட்டுகிறவர்கள் இதற்கென்ன பதில் கூற முடியும்?

அமித்ஷாவின் மகனின் ஊழல்

மத்திய பிரதேசத்தில் வியாபம், கருநாடகத்தில் பா.ஜ.க. எடியூரப்பா மீதும், அவரது சக அமைச்சர் களான சுரங்க ஊழல் என்று குற்றம் சுமத்தப்பட்ட ரெட்டி சகோதரர் ஊழல்கள் எல்லாம் மறந்துவிடுமா? மறைந்துவிடுமா?

அவ்வளவு ஏன்? குஜராத்தில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா வெறும் 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கிய தொழில், இன்று 80 கோடி ரூபாய் வளர்ச்சி என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில்? அவருக்கு வங்கிகள் உதவி என்ற சாக்கு சொல்கிறார்கள் என்றாலும், எதிர்க்கட்சிகளின் இந்தப் பிரச்சாரம்பற்றி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பே விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று கூறியுள்ளதே! ‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக’ அமைய வில்லை என்பதைத்தானே இது காட்டுகிறது?

பிரதமர் வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில், பா.ஜ.க. தலை வர் பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கி, தண்டிக்கப்பட வில்லையா?

சுடுகாட்டு ஊழல், கார்கில் இராணுவ வீரர் சவப் பெட்டி ஊழல்கள் மறக்கக் கூடியவைதானா? அரசு ஓட்டல்களை விற்றதில் ஊழல் குற்றச்சாட்டுகள் வரவில்லையா? பி.ஜே.பி. ஆளும் ராஜஸ்தானில் அர சுக்குச் சொந்தமான ஜோத்பூர் அரண்மனையை முதலமைச்சர் வசுந்தரராஜே தன்வயப்படுத்தி, பிரபல ஊழல் பேர்வழி லலித் மோடியோடு இணைந்து அய்ந்து நட்சத்திர ஓட்டலாக நடத்தவில்லையா?  வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வெளிநாட்டிற்கு ஓடிப்போன லலித்மோடிக்கு செய்த உதவிகள் எல்லாம் நாடாளுமன்றத்தில் சிரிப்பாய்ச் சிரிக்கவில்லையா?

ஏதோ இவர்கள் ‘சொக்கத்தங்கங்கள்’ போலவும், ‘சுத்த சுயம்பிரகாசங்கள்’ போலவும் தங்களைத் தாங்களே வருணித்துக் கொண்டால் போதுமா?

தமிழ்நாட்டில் இவர்கள் ஊழலற்ற ஆட்சிக்கு - காமராசரைத் தானே முன்னிறுத்தவேண்டிய நிலை? அவரை, அவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, பசுவதைத் தடுப்பு என்ற கிளர்ச்சிகள் நடத்தி, புதுடில் லியில் அவரை உயிரோடு எரிக்க முயன்ற கூட்டம் என்பதை மறைத்துக் கொள்ளவா இந்த ‘‘திடீர் காமராசர் பக்தி’’ நாமாவளி எல்லாம்?

பா.ஜ.க.வின் முகமூடிகள்

கழன்று வீழ்கின்றன

ஒப்பனைகள் ஒருபோதும் நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாது; மக்கள் ஏமாளிகளும் அல்லர். பா.ஜ.க.வின் முகமூடிகள் கழன்று விழுகின்றன!

உண்மைகள் ஒருநாள் வெளியாகும்!

 

கி. வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.


சென்னை
24.10.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner