எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, அக்.25   மத்திய அரசு புலனாய் வுத் துறை இயக்குநராக குஜராத்தைச் சேர்ந்த அய்பிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானை மத்திய உள்துறை அமைச் சகம் நியமித்துள்ளது. ராகேஷ் அஸ்தானா மீது ஊழல் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்துகொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராகேஷ் அஸ்தானா குஜராத் பிரிவைச் சேர்ந்த அய்பிஎஸ் அதிகாரி ஆவார். 1984 ஆம் ஆண்டு இவர் அய்பிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு, விஜய் மல்லையாவின் வங்கி மோசடி வழக்கு போன்ற பிரபல வழக் குகளை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்குத் தலைமை வகித்து வருகிறார்.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உள் ளிட்ட அமைச்சரவைக் குழு சிபிஅய் கூடு தல் இயக்குநராக பணியாற்றும் ராகேஷ் ஆஸ்தானாவை சிபிஅய் தலைமை இயக்குநராக நியமனம் செய்ய தனது ஒப்புதலை அளித்துள்ளது.  மோடிக்கு மிகவும் நெருக்கமான இவர் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்தார். இவர் கோத்ரா ரயில் எரிப்பு குறித்து கொடுத்த அறிக்கையை லாலு பிரசாத் ரயில்வேதுறை அமைச்சராக இருந்தபோது அந்த அறிக்கையில் ஒரு சாராருக்கு சாதகமான வகையில் பல் வேறு போலி தகவல்கள் உள்ளதாக கூறி நிராகரித்திருந்தார்.  மோடி தலைமை யில் அரசு பதவியேற்ற பிறகு, லாலு தொடர்பான ஊழல் வழக்குகளை விசா ரிக்கும் பிரிவின் தலைமைப் பொறுப்பை இவரிடம் வழங்கினார்.

ஊழல் வழக்கில்

ராகேஷ் அஸ்தானா

குஜராத்தைச் சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் என்ற நிறுவனத்தில் நடந்த வருமான வரிச் சோதனையில் அந்த நிறுவனத்தின் இயக்குநரின் முக்கிய நாட்குறிப்பு கைப்பற்றப்பட்டது. அதில்  அந்த நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று முக்கிய அதிகாரிகளின் பெயரில் ராகேஷ் அஸ்தானா பெயரும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக சிபிஅய் இவர்மீது 2011 ஆகஸ்ட் 30-ஆம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இவரை விசாரனைக்கு அழைத்து விசாரணை செய்துள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் இவருக்கு எந்த ஒரு பதவி உயர்வும் கொடுக்கக் கூடாது என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சுற்றறிக்கை ஒன்றை 2014-ஆம் ஆண்டு மத்திய உள் துறை அமைச்சகத்திற்கு வழங்கியது.

இதனடிப்படையில் இவருக்கு அந்த ஆண்டு கொடுக்கவிருந்த பதவி உயர்வு நிறுத்தப்பட்டது.  ஆணையத்தின் அறிக்கை மீண்டும் ஒருமுறை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் அந்த அறிக்கையை கவ னத்தில் கொள்ளாது மோடி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஒருவரை சிபிஅய் இயக்குநராக நியமித்துள்ளார்.  இதுகுறித்து சமூக ஆர்வலர் பிரசாத் பூசன் மத்திய அரசுக்கு கேள்வி எழுப் பியிருந்தார்.

அவர் கூறியதாவது, ஸ்டெர்லிங் பயோடெக் டைரியில் லஞ்சம் பெற்ற அதிகாரிகளின்பெயரில்ராகேஷ்அஸ் தானாவின் பெயரும் உள்ளது. இதனடிப் படையில் சிபிஅய் இவர் மீது விசாரணை செய்துவருகிறது.இந்நிலையில்இவரை அந்த சிபிஅய் தலைமை இயக்குந ராகநியமித்ததுஅரசமைப்புமற்றும் சட்ட விதிகளுக்கு எதிரான செயலா கும். மேலும் இவருக்குப் பதவி உயர்வு கொடுக்கவேண்டாம் என்று இரண்டுமுறைமத்தியஊழல்கண் காணிப்புத்துறை அறிக்கைகொடுத்தும் இவரை தலைமைப் பொறுப்பிற்கு நியமித்துள்ளனர் என்று தெரிவித்திருந்தார். கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ள இந்த விவகாரத்தைப்பற்றி நேற்று செய்தியா ளர்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சரமாரியாக கேள்விக்கணைகள் தொடுத்தனர்.  ஆனால் அவர் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner