எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, அக் 25  அமித்ஷா மகன் மீதான முறைகேடுகளை திசை திருப்பவே பாரதீய ஜனதா வினரால் தாஜ்மஹால் குறித்தை சர்ச்சையை கிளப்பியுள்ளனர் என்றுடில்லிஜவகர்லால் பல் கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவின்வருமானம்ஒருசில ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது நாடு முழுவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட் சிகள் சரமாரியாக குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க தலைவர் கன்னையாகுமார் மாணவர் அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளபஞ்சாப்மாநி லம் வருகை புரிந்தார். அப் போது  செய்தியாளர்களிடம்  அவர் கூறியதாவது:

குஜராத்தில் நடைபெற்று வரும் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவின் வாக்குவங்கி தொடர்ந்து சரிந்துவருகிறது. வரும் காலங்களில் நான் அரசியலில் இணைந்து செயல் பட வாய்ப்புள்ளது. தற்போது எந்த அரசியல் கட்சி சார்பிலும் பேசவரவில்லை.

ஜி.எஸ்.டி வரி மற்றும் பண மதிப்பிழப்பு போன்ற அரசின் நடவடிக்கைகள், பெரிய வியாபாரிகளும், சிறிய வியாபாரிகளும் பாதிக்கப் பட்டு வருகின்றனர். ஆனால், அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவின் வருமானம் பல மடங்கு உயர்ந்து உள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தப் பிரச்சினையை திசை திருப்பவே, தாஜ்மஹால் பிரச் சினையை பாஜக கிளப்பி விட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner