எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உயிரோடு இருப்பவர்களுக்குக் கட் அவுட், பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடையாம்!

கட் அவுட், பேனர் வைக்கக்கூடாது என்று சொன்னால், அதில் ஒரு நியாயமாவது இருக்கிறது. அதைத் தான் டிராபிக் ராமசாமி வழக்குப் போட்டு வாதாடினார்.

அது என்ன, உயிரோடு இருப்பவர்கள் வேண்டாம்; இறந்தவர்கள் படம் இருக்கலாம்;

தமிழ்நாட்டில் பெரிய கட்சிகள் என்றால், திமுக, அதிமுக இரண்டும்தான். இந்த இரண்டு கட்சியில், திமுகவில் கட் அவுட் வைத்தால், கலைஞர் படம், ஸ்டாலின் படம் பிரதானமாக இருக்கும்.

அதிமுகவில், எடப்பாடி, ஓபிஎஸ் படத்தை வைத்து, வாக்கு கேட்டால், யாரும் போடப் போவதில்லை. அவர்கள் மறைந்த ஜெயலலிதா படத்தைத் தான் போடுவார்கள்.

இப்போது தீர்ப்பின்படி, திமுக பேனர்களில், கலைஞர், ஸ்டாலின் படம் இடம்பெறாமல், பெரியார், அண்ணா படம் மட்டும் இருக்கலாம்.  அதிமுகவில் ஜெயலலிதா படம் இருக்கலாம்.

ஆக, தீர்ப்பு யாருக்கு சாதகம் என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

உயிரோடு உள்ள பிரதமர், மற்ற தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் படமும் இதில் சேருமா? புரிய வில்லை!

நீதிமன்றம்தான் விளக்கவேண்டும்.

கோவில் கும்பாபிஷேகம் - அதில் அக்கோவில் சாமி உருவங்கள் இடம்பெறுகின்றனவே - அந்த சாமி படங்கள் செத்தாருள் வைக்கப்பட வேண்டுமா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner