எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மும்பை, அக்.26 தேசியவாத காங்கிரசின் செய்தித் தொடர்பாளரும், கட்சி யின் மூத்த தலைவருமான நவாப் மாலிக், மும்பையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தான், துணிச்சல் மிக்க போர் வீரர். ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு உயிர்த் தியாகம் செய்தவர். திப்பு சுல்தான் படையில் இருந்த 70 சதவீத வீரர்கள், இந்துக்கள் என்பதை மறந்துவிட்டு, அவரை அவமதிக்கும் வகையில் பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆர்எஸ்எஸ் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் முன்னோர்களை எதிர்த்துப் போரிட்டவர் என்பதாலேயே, திப்பு சுல்தானை ஆர்எஸ்எஸ் தலைவர்களும், பாஜக தலைவர்களும் எதிர்க்கிறார்கள். ஆங்கிலேயர்களிடம் அடைக்கலம் தேடிய அவர்கள், திப்பு சுல்தானின் தேசப்பற்றை வரையறை செய்வதற்கு உரிமை இல்லை என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner