எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கோவில்களில் சமஸ்கிருதத் தில்தான் அர்ச்சனை நடந்து கொண்டு வருகிறது. அங்குபோய் தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்லுவாரா ஸ்டாலின் என்று சவால்விட்டுள்ளது ‘துக்ளக்‘ (1.11.2017).

திருவாளர் குருமூர்த்தி அய்யர் ஆசிரியர்ப் பொறுப்பு ஏற்றுள்ள இந்தக் காலத்தில் மட்டு மல்ல, திருவாளர் ‘சோ’ ராமசாமி ‘துக்ளக்‘கின் ஆசிரியராக இருந்த போதே ‘துக்ளக்‘ (18.11.1998) ‘‘மொழி ஆர்வமா? மத துவேஷமா?’’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட தலையங்கத்தில் அவர் எழுதியி ருந்தார்.

‘‘நாயன்மார்களும், ஆழ் வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும். புனிதம் இருக்காது. அதாவது அங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல; ஒலிக்கு?’’ என்று எழுதினார் திருவாளர் சோ.

ஆகக் கடவுளையே கூட தங்கள் ஸம்ஸ்கிருத மொழியின் ஒலி என்ற டப்பாவுக்குள் அடைத்துவிட்டார்கள்.இந்து மதக் கடவுள்களே அக்கிரகாரத் தினரின் தனிச் சொத்துதானே - பார்ப்பனர் அல்லாதாரைச் சுரண்டுவதற்கான கருவிதானே - அதனைப் பறிமுதல் செய்து விட்டால், அவர்களின் பிழைப்பு நாறிப் போய்விடாதா?

கோவில்களில் வழிபாட்டு மொழி என்கிறபோது, பக்தர்கள் தமிழில் அர்ச்சனைக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டார்களாம். மாறாக, ஸம்ஸ்கிருதத்துக்குத்தான் ஆதரவு தெரிவிப்பார்களாம்! எழுதுகிறது ‘துக்ளக்.’

ஆனால், உண்மை நிலை என்ன?

‘‘தமிழ்நாட்டுக் கோவில்களில் அர்ச்சனை மொழியாக தமிழ் இருக்கவேண்டுமா? அல்லது சமஸ்கிருதம் இருக்கவேண்டுமா? என்பதுபற்றிபக்தர்களின் விருப் பத்தினை அறிவதற்காக - மதுரை, இராமேசுவரம், சிதம்பரம், பழனி, கன்னியாகுமரி, சென்னை, வடபழனி, திருவரங்கம், தஞ்சாவூர், கோவை ஆகிய ஊர்களில் ஒன்பது கோவில்களில் 27.11.1998 காலை 6 மணிமுதல் 9 மணிவரை பக்தர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழர் தேசிய இயக்கம் முன்னின்று இதனை நடத்தியது. 18,700 பக்தர்கள் கலந்துகொண்டனர். தமிழுக்கு ஆதரவாக 17,695 பக்தர்களும், சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக 823 பக்தர்களும் வாக்களித்தனர். அர்ச்சனைமொழிபற்றிபக்தர் கள்தான் முடிவு செய்யவேண் டும் என்று கருத்துக் கூறு வோர் இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும்.’’

(பழ.நெடுமாறனை ஆசிரியராகக் கொண்ட ‘தென்செய்தி’, நாள்: 15.12.1998, பக்கம் 4)

‘துக்ளக்கே’ இதற்கு மேலும் என்ன ஆதாரம் தேவை?

பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்று சொல்லும் தமிழ்த் தேசியத் ‘திலகங்கள்’ பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.

‘‘தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழ ரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ்மொழிமூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற் றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்புக் கொள்வதில்லை. அத னைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் சமஸ்கிருதத் தின்மீதுதான்.’’

- அறிஞர் அண்ணா,

(‘திராவிட நாடு’, 2.11.1947, பக்கம் 18)

இப்பொழுது சொல்லுங்கள், பார்ப்பனர்கள் தமிழர்கள்தானா?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner