எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, அக்.27 “நாட்டின் பொரு ளாதாரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. டாக்டர் ஜேட்லியின் மருந் துகள் திறனற்றவையாக இருக்கின்றன’ என்று காங்கிரசு துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

குஜராத்தில் அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, ஜிஎஸ்டி வரிவிதிப்பை பிரபல பாலி வுட் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு ‘‘கப்பார் சிங் வரி’’ என்று கிண்டல் செய்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “2ஜி மற்றும் நிலக்கரிச் சுரங்க ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு,சட்டபூர்வவரி விதிப்பு முறைக்கு எதிராக ஆட் சேபங்கள் இருக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்திருந்தார். மேலும், ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து ராகுல் காந்தி அறிந்திருக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

இந்நிலையில், ஜேட்லியின் இந்தக் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில், ராகுல் காந்தி, சுட்டு ரையில் இந்தி மொழியில் வியாழக் கிழமை வெளியிட்ட பதிவில் கூறி யிருப்பதாவது:

டாக்டர் ஜேட்லி அவர்களே! ரூபாய் நோட்டு திரும்பப்பெறும் நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நாட் டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. மற்றவர்களுக்கு நான் சளைத்தவன் இல்லை என்று நீங்கள் கூறிக் கொள்கிறீர்கள். ஆனால் நீங்கள் அளிக்கும் மருந்துகள் திறனற்றவையாக உள்ளன என்று அந்தப் பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner