எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அப்பாடி, இப்பொழுது விழிப்பா?

பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 26  சதவிகித இட ஒதுக்கீடாம். தமிழ்நாட்டிலோ பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு.

தெரிந்துகொள்க! திராவிட ஆட்சிக்கும், பா.ஜ.க. ஆட்சிக்கும் உள்ள வேறுபாட்டை!


சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைய தடை:

அமர்வில் 50 சதவீதம் பெண் நீதிபதிகள் இருக்கவேண்டும்

உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

புதுடில்லி, அக்.28 கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு 5 முக்கிய கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு தீர்வு காண வழக்கை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் நேற்று பரமேஸ்வரன் நம்பூதிரி சார்பில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் இந்தப் பிரச்சினையை பெண்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். எனவே 50 சதவீதம் பெண் நீதிபதிகளைக் கொண்ட அமர்வைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் அல்லது சிறப்பு ஜூரி (நடுவர்) விசாரணைக்கு அனுப்பவேண்டும். சிறப்பு நடுவர்களாக உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்களை நியமிக்கலாம். குறிப்பிட்ட கால அவகாசத்தில் இதில் தீர்வு காணுமாறு கூறலாம். அரசியல் சாசன நீதிமன்றங்களின் நேரத்தை சேமிக்க ஏற்ற வகையில் பொது நல வழக்குகளில் விசாரணை நடத்த ஜூரி முறையை கொண்டு வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner