எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை கவின் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த பிரகாஷ் என்ற மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சிக்குரியது. அவரது சட்டைப் பையில் இருந்த இரு கடிதங்களில் தற்கொலைக்கான காரணங்களை விளக்கி இருந்தார்.

பேராசிரியர் ரவிக்குமார் என்பவர் மத ரீதியான தொல்லைகளை கொடுத்தார் என்றும், தான் சொல்லும் கடவுளைத்தான் கும்பிடவேண்டும் என்றெல்லாம் மன உளைச்சலைக் கொடுத்துள்ளார் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இதன் பொருள் என்ன?

கல்லூரிக்குள் காவிகள் அட்டகாசமா? உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டாக வேண்டும்.வெளியேறவில்லையாம்!

2015 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற எந்த நிறுவனமும் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறிடவில்லை. 2018 இல் மீண்டும் மாநாடு நடத்தப்படும் என்று கூறியுள்ளார் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் சம்பத்.

2015 ஆம் ஆண்டில் பங்குகொண்ட அந்த நிறுவனங்கள் வெளியேறவில்லை என்கிறார்; சரி, அவர்கள் ஏன் தொழிற்சாலைகளைத் தொடங்கவில்லையாம்?

புதிதாக எதற்கு மாநாடாம்? மூன்று ஆண்டுகள் கழித்து 2018 இல் நடந்த மாநாட்டில் பங்கேற்ற எந்த நிறுவனமும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று அதற்கு அடுத்தாண்டு சொல்லுவார்களோ!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner